காவி உடையா ஹிஜாப் உடையா? – பரபரக்கும் கல்லூரி வளாகங்கள் !

Share this News:

பெங்களூரு (03 பிப் 2022): கர்நாடகாவில் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவி உடை அணிந்து வந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது, இல்லையென்றால் நாங்கள் இதேபோல் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவிய, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது.

இதையடுத்து கர்நாடகாவில் இருக்கும் பெரும்பாலான பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய வரிசையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடுப்பியில் இருக்கும் ஒரு அரசு பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் “ஆப்சென்ட்” என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடு இன்னும் சில பியூ கல்லூரிகளிலும் போடப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வேறொரு கல்லூரியிலும் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதையடுத்து இன்று அங்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் 46 பேரும் கல்லாரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மாணவிகள் கல்லூரி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், கல்லூரியின் தலைமை ஆசிரியருடன் மாணவிகள் உருக்கமாக பேசி உள்ளனர். சார் எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது.. ப்ளீஸ் எங்களை கல்லூரிக்குள் விடுங்கள். இத்தனை நாட்கள் நாங்கள் வந்த போது பிரச்சனை இல்லையே. எக்ஸாம் எழுத ரெண்டு மாசம்தான் இருக்கு. எங்கள் எதிர்காலத்தை கெடுக்க வேண்டாம் என்று மாணவிகள் கண்ணீர்விடப்படி அழுது இருக்கிறார்கள்.

ஆனால் மாணவிகள் கண்ணீர்விட்டு அழுத போதும் அதை கேட்காமல் அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் கல்லூரியின் கதவை பூட்டி இருக்கிறார். மாணவிகள் இப்படி கண்ணீர்விட்டு அழுத சம்பவம் இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது.

இவ்வளவு நடந்தும் மாநில கல்வி நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.


Share this News:

Leave a Reply