இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 14:31:44 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாளை மொகாலியில் 2ஆவது 20-20

E-mail அச்செடுக்க
sangakkaraஇலங்கைக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (டிசம்பர் 12) மொகாலியில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்ற இந்திய அணி நாளைய போட்டியில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 29 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மொகாலியில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாக்பூர் போட்டியில் இந்தியாவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 5 கேட்சுகளை தவற விட்டனர். இதே போல பந்து வீச்சும் குறிப்பிடும்படியாக இல்லை. காம்பீர், ஷேவாக் தவிர யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை.

இதனால் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. எனவே அதையெல்லாம் சரி செய்து தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி நாளை போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியை பொறுத்த வரை பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாக உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி நாளைய போட்டியில் வென்று 20 ஓவர் கிரிக்கெட்தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.

சங்ககராவின் அதிரடி ஆட்டம் முதல் போட்டியில் முக்கிய பங்கு வகித்தது. தில்சான், ஜெயசூர்யா, கபுகதேரா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த போட்டி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37
வியாழன், 11 மார்ச் 2010 13:36
வியாழன், 11 மார்ச் 2010 13:34

Search