பென்னாகரம் தொகுதிகயில் அனைத்துக் கட்சிகளும் பா.ம.க. வேட்பாளர் தமிழ்க்குமரனை ஆதரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது :பொதுவாக இடைத்தேர்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியைச் சார்ந்தவர்களையே இடைத்தேர்தல் நடத்தாமல் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இடைத்தேர்தலில் பண நாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்க விரும்பும் கட்சிகள் பா.ம. க.வை ஆதரிக்க வேண்டும். வேட்பாளரை அறிவித்து விட்டோம். எனவே எங்கள் வேட்பாளரை ஆதரியுங்கள் என நான் கேட்கவில்லை.
1991 தேர்தலில் அந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டு பா.ம.க. 32 ஆயிரத்து ஓட்டுகள் வாங்கியது. 1996-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.
2006-ம் ஆண்டு தேர்தலில் நிர்பந்தத்தின் காரணமாக கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுத்தோம். இப்போது நாங்கள் எந்தக்கூட்டணியிலும் இல்லை.
பா.ம.க.வின் செல்வாக்கு அடிப்படையில் ஆதரவு கேட்கிறேன். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் சந்தித்து பேசும் திட்டம் இல்லை. எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருமங்கலம் பார்முலாவை போல் நாங்கள் பென்னாகரம் பார்முலாவை உருவாக்கி இருக்கிறோம். 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



விமர்சனம் 



