இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 19:44:18 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாடாளுமண்றத்தில் விரைவில் தமிழ் - அழகிரி தகவல்

E-mail அச்செடுக்க
நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி இந்தியில்  மொழிபெயர்த்து ஹெட்போன் மூலம் அளிக்கப்படும் வசதி தமிழுக்கும் தேவை. இதற்காக சபாநாயகரை விரைவில் சந்திப்பேன் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் தமிழில் தான் பதில் கூறுவேன் என்று நான் சொன்னதாக சிலர் தவறாக கூறுகின்றனர். அமைச்சரோ, எம்பியோ நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தியில் பேசினால், அது மொழிபெயர்க்கப்பட்டு ஹெட்போன் மூலம் கேட்கும் வசதி உள்ளது.  ஆங்கிலத்தில் பேசினால் இந்தியிலும், இந்தியில் பேசினால் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழி பெயர்த்து ஹெட்போன் மூலம் அளிக்கப்படுகிறது. இதே போல் தமிழ் பேச்சு ஆங்கிலம், இந்தியிலும், ஆங்கிலம், இந்தி பேச்சு தமிழிலும், மொழிபெயர்த்து அளிக்கும் வசதி தேவை. தமிழுக்கு அந்த வசதியை அளிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். இதை நான் மட்டுமல்ல, திமுக மற்றும் விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் மு.லீக் கட்சியினரும் கேட்டுள்ளனர்.

இது குறித்து நாடாளுமன்ற திமுக குழு தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்பிறகு சபாநாயகர் தன்னை சந்தித்து பேசும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். விரைவில் டெல்லியில் சபாநாயகரை சந்தித்து எனது கருத்தை கூறுவேன் என தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37
வியாழன், 11 மார்ச் 2010 13:36
வியாழன், 11 மார்ச் 2010 13:34

Search