ராகிங்:​ கல்​லூரி மாண​வர் தற்​கொலை

E-mail அச்செடுக்க
மரக்​கா​ணம் அருகே கல்​லூரி மாண​வர் ராகிங் கொடு​மை​யால் தீக்​கு​ளித்து இறந்​த​தாக காவல் துறையினர் வழக்​குப் பதிவு செய்துள்​ள​னர்.​

வி​ழுப்​பு​ரம் மாவட்டம் மரக்​கா​ணத்தை அடுத்த அனு​மந்​தை​யைச் சேர்ந்த குப்​பு​சா​மி​யின் மகன் ஸ்ரீதர் (20).​ பொம்மையார்​பா​ளை​யத்​தில் உள்ள சித்​தர் சிவ​ஞானி ஆண்​கள் கலைக் கல்​லூ​ரி​யில் முத​லாம் ஆண்டு படித்து வந்​தார்.​

கல்​லூ​ரி​யில் அவரை சீனி​யர் மாண​வர்​கள் ராகிங் செய்​த​தாகக் கூறப்​ப​டு​கி​றது.​ இத​னால் மன​மு​டைந்த ஸ்ரீதர் தன் தந்​தை​யி​டம் தெரி​வித்​தார்.​ அவ​ரது தந்தை குப்​பு​சாமி கல்​லூ​ரிக்​குச் சென்று முதல்​வ​ரி​டம் புகார் செய்​தார்.​ கேலி செய்த மாண​வர்​க​ளின் பெய​ரை​யும் தெரி​வித்​தார்.​

இ​த​னால் ராகிங் செய்த மாண​வர்​கள் மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று நிர்​வா​கத்​தின் தரப்​பில் உறு​தி​ய​ளிக்​கப்​பட்​டது.​ எனவே வழக்​கம் போல் ஸ்ரீதர் கல்​லூ​ரிக்கு வெள்​ளிக்​கி​ழமை சென்​றார்.​ ஆனால் பிற்​பக​லில் வீடு திரும்​பி​விட்​டார்.​

அப்​போது சோக​மாக காணப்​பட்ட அவர்,​​ மாலை​யில் திடீ​ரென உட​லில் மண்​ணெண்​ணெய் ஊற்றி தீக்​கு​ளித்​தார்.​ அருகி​லி​ருந்​த​வர்​கள் தீயை அணைத்து புதுவை ஜிப்​மர் மருத்​து​வ​ம​னை​யில் அவரை சேர்த்​த​னர்.​ அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்​கி​ழமை இறந்​தார்.​

இது​கு​றித்து மரக்​கா​ணம் காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

Search


விளம்பரம்