"மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள கிராமப்புற சுகாதார நலன் பட்டப் படிப்பை (பி.ஆர்.எச்.சி) தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை" என முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சுமார் 13,000 அரசு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். கிராமங்களில் மருத்துவர் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாலும், அரசு-தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஆண்டுதோறும் 4,000 பேர் எம்.பி.பி.எஸ். படித்து முடிப்பதாலும் கிராம சுகாதார நலன் பட்டப் படிப்பை தமிழகத்தில் தொடங்கத் தேவை இல்லை என அரசு கருதுகிறது.
மேலும் எம்.பி.பி.எஸ். முடித்து பதிவு செய்துள்ளவர்களில் 2006-07-ம் ஆண்டு வரை அரசுப் பணி அளிக்கப்பட்டு விட்டது என்பதால் கிராமப்புற சுகாதார நலன் பட்டப்படிப்புக்கு அவசியம் இல்லை என சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.
கிராமங்களில் மருத்துவர் காலியிடங்கள் அதிகமாக உள்ளதாலும், கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்கள் தயங்குவதாலும் கிராம மாணவர்கள் மட்டுமே சேரத் தகுதி உடைய கிராமப்புற மருத்துவப் படிப்பை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் இந்த நான்கு ஆண்டு சுகாதார நலன் பட்டப்படிப்பைத் தொடங்க அது முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



