தன் மீது பாலியல் கொடுமை தொடுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப் போவதாகக் கூறி சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டிற்கு அருகே செல்ல முயன்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீடு அருகே பல்வேறு அடுக்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07/02/2010) அன்று காலையில் அரியலூரை சேர்ந்த வசந்தகுமாரி (24) என்ற பெண் கோபாலபுரத்தினுள் நுழைந்துள்ளார்.
பாலியல் கொடுமை தொடர்பாக புகார் அளிக்கப் போவதாகக் கூறி முதல்வரின் வீடு அருகே சென்ற அவரை, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து விசாரித்தனர். அவர் தெரிவித்த விவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவரை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இதனால் முதல்வர் வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



It will come the law of allahu, there is only one solution is islam way.