தீவிரவாதி பயணம்? விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

E-mail அச்செடுக்க
அல்கொய்தா தீவிரவாதி பயணிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து,​​ மும்பையிலிருந்து துபைக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.​ தீவிரவாதி என்ற சந்தேகத்தில்,விமானத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இ.கே.505 விமானம்,​​ மும்பையிலிருந்து துபைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(07/02/2010) அன்று காலை புறப்பட்ட சிறிது நேரத்தில்,​​ விமானநிலைய சரக்கு கையாளும் பிரிவுக்கு ஒருவர் போன் செய்தார்.​ தனது பெயர் சுரேஷ் சவாண் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்,​​ "துபை செல்லும் விமானத்தில்,​​ ஷாபாஸ் கான் என்ற பெயருடைய,​​ அல்கொய்தா தீவிரவாதி பயணிப்பதாக தெரிவித்தார்.

அதையடுத்து,​​ துபை விமானத்தை உடனடியாகத் தரை இறக்குமாறு,​​ மும்பை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது.​ காலை 10.00 மணியளவில் துபை விமானம் தரையிறக்கப்பட்டது.​ பயணிகள் அனைவரும் கீழிறக்கப்பட்டனர்.​ அனைவரும் தீவிரசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.​ பயணிகளின் உடைமைகளும் சோதிக்கப்பட்டன.

ஷாபாஸ் கான் என்ற பெயருள்ள பயணி விமானத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.​ அவரும்,அவரது மனைவியும் விமானநிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு,​​ அழைத்துச் செல்லப்பட்டனர்.​ விசாரணைக்குப் பின்,​​ ஷாபாஸின் மனைவி மட்டும்,​​ இதய நோயாளி என்பதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.​ விசாரணை குறித்த இதர விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.​ விமானப் பயணிகள் அனைவரும் தீவிரமாக சோதிக்கப்பட்ட பின்,​​ நான்கு மணிநேரம் கழித்து,​​ மதியம் 2.00 மணியளவில் துபைக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.​ இந்தச் சோதனைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக,​​ மும்பை சர்வதேச விமானநிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென தரையிறக்கப்பட்டு, விமானத்திலிருந்து இருவர் கைது செய்யப்பட்டது பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

Search


விளம்பரம்