இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 03:21:33 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வரிச் செய்திகள்: மாயாவதிக்கு மீண்டும் ரூ.18 லட்சத்தில் பணமாலை பகுஜன் சமாஜ் கட்சியினர் அதிரடி --> ராகுல் பிரியங்கா திருச்சி வருகை! காங்கிரஸார் உற்சாகம் --> பாகிஸ்தானில் 42 தீவிரவாத இயக்கங்கள் – அந்தோணி --> பென்னாகரம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் – தேர்தல் ஆணையம் --> ஹிலாரி – நிருபமாராவ் சந்திப்பு --> உகாண்டாவில் பயங்கர கலவரம் ராணுவம் குவிப்பு --> காங்கிரசுக்கு எதிராக 3 கட்ட போராட்டம் மாயாவதி அறிவிப்பு --> காமன் வெல்த் குத்து சண்டை போட்டி விஜயேந்தர் தங்கம் வென்றார் --> மோட்டார் வாகன தொழிற்சாலை தலைநகரமாக சென்னை மாறும் – கருணாநிதி --> ஃபொன்சேகா வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-->மக்களவை ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஒத்திவைப்பு! --> ஃபொன்சேகா மீது ராணுவ விசாரணை தொடங்கியது! --> ஐபிஎல் கிரிக்கெட் மூலம் 580 கோடி இலாபம்! --> காவல்துறை விசாரணைக்கு சென்றவர் தூக்குபோட்டு சாவு! --> ஜெருசெலத்தில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் காவலர்களுடன் மோதல்! --> சூறாவளியால் பாதிக்கபட்ட ஃபுஜி தீவு தேசிய பேரழிவாக அறிவிப்பு! --> மத்திய சீனா சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலி! --> கிழக்கு கடற்கரை சாலை மேலும் 104 கிலோமீட்டர் விரிவாக்கம்! --->

தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

E-mail அச்செடுக்க
போலியோ நோய் அதிகம் பரவக்கூடிய காலத்தில் வருடத்திற்கு 2 முறை தடுப்பு மருந்து வழங்க உலகம் முழுவதும் முடிவு செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் இந்த போலியோ சொட்டுமருந்து சிறப்பாக போடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இந்தியாவில் போலியோ சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் போலியோ இல்லாத நிலைஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இவ்வருடத்திற்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நேற்று நடைபெற்றது.

இதற்காக 40 ஆயிரத்து 399 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள்,ரெயில் நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், கடற்கரை உள்பட பொதுமக்கள் கூடுமிடங்கள்,அகதிகள் முகாம் உள்பட ஏராளமான இடங்களில் போலியோ சொட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகாமுக்கு ஆர்வத்துடன் கொண்டுவந்து சொட்டுமருந்து போட்டனர். மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துபோடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாமாக காணப்பட்டது.

வெளி மாநிலத்தில் இருந்து கட்டுமான தொழில் உள்பட பல கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து போடப்பட்டது. அகதி முகாம்களில் உள்ள 30 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 70 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

சென்னையில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 224 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்துபோடப்பட்டுள்ளது. அமைந்தகரையில் கலெக்டர் காலனியில் மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.

மேயர் கூறுகையில், சொட்டுமருந்து முகாமில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள்,தன்னார்வலர்கள் உள்பட மொத்தம் ஐயாயிரம் பேர் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லகானி,துணைஆணையர் ஜோதி நிர்மலா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழு தலைவர் சுரேஷ்பாபு, சுகாதார அலுவலர் டாக்டர் குகாகனந்தம், கூடுதல் சுகாதார அலுவலர் தங்கராசு, மாவட்ட குடும்ப நல அதிகாரி விஜயா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

செவ்வாய், 16 மார்ச் 2010 17:27
சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37

Search