இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 03:21:33 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வரிச் செய்திகள்: மாயாவதிக்கு மீண்டும் ரூ.18 லட்சத்தில் பணமாலை பகுஜன் சமாஜ் கட்சியினர் அதிரடி --> ராகுல் பிரியங்கா திருச்சி வருகை! காங்கிரஸார் உற்சாகம் --> பாகிஸ்தானில் 42 தீவிரவாத இயக்கங்கள் – அந்தோணி --> பென்னாகரம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் – தேர்தல் ஆணையம் --> ஹிலாரி – நிருபமாராவ் சந்திப்பு --> உகாண்டாவில் பயங்கர கலவரம் ராணுவம் குவிப்பு --> காங்கிரசுக்கு எதிராக 3 கட்ட போராட்டம் மாயாவதி அறிவிப்பு --> காமன் வெல்த் குத்து சண்டை போட்டி விஜயேந்தர் தங்கம் வென்றார் --> மோட்டார் வாகன தொழிற்சாலை தலைநகரமாக சென்னை மாறும் – கருணாநிதி --> ஃபொன்சேகா வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-->மக்களவை ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஒத்திவைப்பு! --> ஃபொன்சேகா மீது ராணுவ விசாரணை தொடங்கியது! --> ஐபிஎல் கிரிக்கெட் மூலம் 580 கோடி இலாபம்! --> காவல்துறை விசாரணைக்கு சென்றவர் தூக்குபோட்டு சாவு! --> ஜெருசெலத்தில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் காவலர்களுடன் மோதல்! --> சூறாவளியால் பாதிக்கபட்ட ஃபுஜி தீவு தேசிய பேரழிவாக அறிவிப்பு! --> மத்திய சீனா சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலி! --> கிழக்கு கடற்கரை சாலை மேலும் 104 கிலோமீட்டர் விரிவாக்கம்! --->

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து!

E-mail அச்செடுக்க
ஆந்திர மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4% இடஒதுக்கீட்டை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அரசால் அமல்படுத்தபட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சில அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்று(08/02/2010) வழங்கப்பட்டது.

தீர்ப்பில், "சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது" என கூறப்பட்டுள்ளது. எனினும் "கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தச் சட்டப்படி இடஒதுக்கீடு பெற்றது செல்லும்" எனவும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்வது இது மூன்றாவது முறையாகும். 2004-ல் ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியபோது, இதே போன்று ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

அதன்பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றிமைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டுவதாகக் கூறி அதையும் உயர்நீதிமன்றம் மீண்டும் ரத்து செய்தது.

இதன்பிறகு மொத்த இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்குள் அடக்கும்படியாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் மீதும் தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மூன்றாவது முறையாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: hmsathiq, February 15, 2010
smilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gif
0
...
எழுதியவர்: hmsathiq, February 15, 2010
samooha neethiyin kuralvalai nerikkappaduhiradhu

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

செவ்வாய், 16 மார்ச் 2010 17:27
சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37

Search