மேற்கு வங்கம் : முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு!

E-mail அச்செடுக்க
முஸ்லிம்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.​ இதற்கான அறிவிப்பினை திங்கள்கிழமை மாநில அரசு வெளியிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் கல்வி,​​ சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் ​(ஓ.பி.சி.)​ பிரிவின் கீழ் இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ரங்கனாத் மிஷ்ரா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.​ இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்பார்க்காமல் விரைந்து செயலாற்ற இந்த அரசு உத்தேசித்துள்ளது.​ இதற்காக மாநிலத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

என்று தெரிவித்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து


Search


விளம்பரம்