முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது ஒரு சட்டவிரோதச் செயலாகும் என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமாக ரணில் வக்கிரமசிங்க இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா புதுதில்லியில் பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர், சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக பீபீசியின் சிங்களச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது முற்றாகச் சட்டவிரோதமானது. அத்துடன் இராணுவச் சட்டத்தின்படியும் அது விரோதமானது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளேன். எனது இந்திய பயணத்திற்கான காரணமும் அதுவே. எமது நாட்டின் தற்போதைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக சகல இந்தியத் தலைவர்களுக்கும் எடுத்துக் கூறியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க BBC சிங்கள சேவைக்கு வழங்கிய விஷேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 


