இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 19:35:33 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போர்க் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காகவே பொன்சேகா கைது : கனடியத் தமிழர்கள்!

E-mail அச்செடுக்க
போர்க் குற்ற வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளதாக கனடியத் தமிழர்கள் கூறியுள்ளனர். இலங்கை அதிபார் மகிந்த ராஜபக்ஷ மீதான போர்க்குற்ற சர்வதேச விசாரணை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தன்னுடைய நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு ராஜபக்ஷ இவ்வாறு செய்ய இயலும் என்றால், இவரிடமிருந்து தமிழர்கள் எதனை எதிர்பார்க்க முடியும்? இந்த நான்கு சகோதரர்களும் (ராஜபக்ஷ சகோதரர்கள்) தமிழர்களுக்கு எதனையும் வழங்க மாட்டார்கள் என்று கனடியத் தமிழர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபால்பிள்ளை கூறியுள்ளார்.

1 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தற்போதும் சிறைப்பிடிக்கப்பட்டே உள்ளனர் என்று கூறிய அவர், ஆதரவு பெருகியுள்ள ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக உள்ளது என்றும் கூறினார்.

இலங்கையின் மீதான போர்க்குற்ற வழக்கில் அதிபர் ராஜபக்ஷவிற்கு எதிராக சாட்சியம் அளிக்க பொன்சேகா ஒப்புக் கொண்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போர்க்குற்ற வழக்கு தொடர்பான எவ்வித விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாகவும், அவர்கள் (ராஜபக்ஷ சகோதரர்கள்) போர்க்குற்றம் செய்திருந்தால் அவர்களைத் தாம் காப்பாற்றப் போவதில்லை என்றும், போர்க் குற்றம் செய்தவரைக் காப்பாற்றுவது தேசவிரோதமானது என்றும் அண்மையில் சரத் பொன்சேகா கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37
வியாழன், 11 மார்ச் 2010 13:36

Search