இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 12:57:22 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சரத் பொன்சேகாவுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்க இதுவரை அனுமதி இல்லையாம்.

E-mail அச்செடுக்க
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆறு மணிக்கொரு முறை உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை தடையின்றி உட்கொள்ளுவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்குமாறு அவரது மனைவி அனோமா பொன்சேகா இரகசிய பொலிசாரினூடாக விடுத்த வேண்டுகோளுக்கு இதுவரை பாதுகாப்பு அமைச்சின் பதில் கிடைக்கவில்லை என lankanewsweb இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதலுக்குள்ளான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சிகிச்சையின் பின் வாழ்நாள் முழுவதும்  குறித்த மருந்து மாத்திரைகளை தினமும் ஆறு மணிக் கொருமுறை உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர். தொடராக 18 மணிநேரம் இந்த மருந்து மாத்திரைகள் பாவிக்காவிடின் அது அவருக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில் அவருக்கு குறித்த மருந்து மாத்திரைகளை உட்கொள்ள தேவையான வசதிகள் செய்து கொடுக்குமாறு அவரது மனைவி வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், அதற்கு இதுவரை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் திருமதி அனோமா பொன்சேகாவை ஆதாரம் காட்டி இவ்விணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

ஞாயிறு, 07 மார்ச் 2010 16:38
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:37
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:37
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:35
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:35
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:33
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:32
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:31
ஞாயிறு, 07 மார்ச் 2010 16:30
வியாழன், 04 மார்ச் 2010 18:39

Search