தமிழர்கள் மத்தியில் பணியாற்றிய முஸ்லிம் பெண்ணுக்கு சர்வதேச மகளிருக்கான உயர் விருது
இலங்கை புத்தளத்தில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பணியாற்றி வரும் ஜன்சிலா மஜீத் என்பவர் சர்வதேச அளவிலான உயர் விருதான 'துணிச்சல் மிக்கப் பெண்' தேர்வு செய்யப்பட்டவராவார். வரும் 10 ஆம் தேதி அமெரிக்க அரசாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவருக்கு அந்த உயரிய விருதை வழங்க உள்ளார்.
சர்வதேச அளவில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றிய பெண்கள் பத்துப் பேர் இந்த விருதுக்காக வருடந்தோறும் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த வருடம் இந்த விருது இலங்கைப் பெண்ணுக்கும் கிடைத்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான், சைப்பிரஸ், டொமினிக்கன் குடியரசு, இரான், கென்யா, கொரியா, சிரியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 9 பேரும் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச மட்டத்திலான இந்த விருது கிடைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்த ஜென்சிலா, சமூக நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனத்தைக் கடந்த 7 வருடங்களாக நடத்தி வருவதாகக் கூறுகின்றார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது ஜென்சிலாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் தஞ்சமடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை புத்தளத்தில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பணியாற்றி வரும் ஜன்சிலா மஜீத் என்பவர் சர்வதேச அளவிலான உயர் விருதான 'துணிச்சல் மிக்கப் பெண்' தேர்வு செய்யப்பட்டவராவார். வரும் 10 ஆம் தேதி அமெரிக்க அரசாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவருக்கு அந்த உயரிய விருதை வழங்க உள்ளார்.சர்வதேச அளவில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றிய பெண்கள் பத்துப் பேர் இந்த விருதுக்காக வருடந்தோறும் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த வருடம் இந்த விருது இலங்கைப் பெண்ணுக்கும் கிடைத்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான், சைப்பிரஸ், டொமினிக்கன் குடியரசு, இரான், கென்யா, கொரியா, சிரியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 9 பேரும் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச மட்டத்திலான இந்த விருது கிடைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்த ஜென்சிலா, சமூக நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனத்தைக் கடந்த 7 வருடங்களாக நடத்தி வருவதாகக் கூறுகின்றார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது ஜென்சிலாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் தஞ்சமடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



