NEW(S):

மக்களவையில் மன்மோகன்சிங்-அத்வானி நேருக்கு நேர் விவாதம்

E-mail அச்செடுக்க

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு, பாரதீய ஜனதா தலைவர் அத்வானி பேசுகையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்கக்கூடாது.சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளிநாட்டு செயலாளர்கள் சந்தித்து பேசியதே, அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாகத்தான்'' என்று குற்றம் சாட்டினார்.


 
உடனே பிரதமர் மன்மோகன்சிங் குறுக்கிட்டு, "பாகிஸ்தானுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு, அமெரிக்காவின் நெருக்கடி காரணம் அல்ல.இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில்,அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி ஏற்றபின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைகளில், இரு நாடுகளும் விரும்பாத வரை, அமெரிக்கா தலையிடாது என்று ஒபாமா ஏற்கனவே நாங்கள் சந்தித்தபோது உறுதி அளித்து இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
 
பிரதமர் மன்மோகன்சிங் மேலும் பேசுகையில்,"காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு எந்த ரகசிய ஒப்பந்தமும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்த போதும், பாகிஸ்தானுடன் பல தடவை பேச்சு நடத்தி இருக்கிறீர்கள்.ஒரு முறை கூட, பேச்சு விவரங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை.இப்போது மட்டும் பேச்சுவார்த்தை விவரத்தை தெரிவிக்கக் கேட்பது சரியா?'' என்றும் கேட்டார்.
 
பின்னர் பேசிய அத்வானி, "மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் போதிய ஆதாரங்களை இந்தியா கொடுத்தும் அவற்றை ஏற்க பாகிஸ்தான் மறுக்கிறபோது தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதில் என்ன பயன்?'' என்றார்.
 
இதற்கு மன்மோகன் சிங் பதிலளிக்கையில்,``இது குறித்தும் பேச இருக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதுதான் அரசின் விரும்பம்`` என்றார்."நீங்கள் பிரச்சினைகளை திசை திருப்புகிறீர்கள்'' என்று மன்மோகன் சிங், அத்வானி மீது குற்றம் சாட்டினார். அதற்கு அத்வானி, "நான் திசை திருப்பவில்லை.பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்'' என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

< மார்ச் 2010 >
M T W T F S S
1 2 3 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து


Search


விளம்பரம்