சென்னை: தமிழ்நாட்டுக்கு ஹிந்திமொழி அவசியமான ஒன்றல்ல என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த இங்கு அனைத்து மாநில தொழிலாளர்களும் அவரவர்களுக்கு தெரிந்த, விரும்புகிற மாநிலத்துப் பாடல்களை இங்கே பாடினார்கள்
ஹிந்திப் பாடல்களைப் பாடுகிறார்களே' என்று பத்திரிகையாளர் ராம் கூறினார். பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை; தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன்.மொழி ஆதிக்கத்தை நான் எப்போதும் விரும்பவில்லை: மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற, தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை. ஒரு மொழிக்காரர்கள், இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை.
ஆனால், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள்.அதேபோல், தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை; வரவேற்றீர்கள். இப்படி, ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர, ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை என்று தமிழக முதல்வர் கூறினார்.
இந்த உன்னதமான கட்டடத்தைக் கட்டி முடிக்கக் காரணமான அரசு அலுவலர்களும், ஒப்பந்தக்காரர்களும், வடிவமைத்தவர்களும், வடிவமைப்புக்கு உரியவாறு பணியாற்றியவர்களும், குறிப்பாக எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய உங்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 




தமிழனை மடையனாக்குவதில் முதல் நிலையில் நிற்பது நீ தான் என்பதை இன்று தமிழன் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான். இன்னும் நீண்டகாலத்துக்கு நீ இந்தியின் பெயர் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
தமிழ்நாட்டுக்காரன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கமுடியாமைக்கு நீ தான் பிரதான காரணம். உன் மகளை மட்டும் ஹிந்தியில் பட்டம் வாங்க வைத்து விட்டு, நாட்டு மக்களை முட்டாளாக்குகிறாயா? உன் வயதுக்காவது மரியாதை கிடைக்க வேண்டுமெனில், மரியாதையாக வாயை மூடிக்கொண்டிரு.
சிங்கிள் டீக்கு லாட்டரியடித்து சென்னைக்குக் கள்ளரயில் ஏறி வந்த நீயி, இன்று ஆசியாவிலேயே பெரிய 10 பணக்காரர்களில் ஒருவன். இந்தச் சொத்து உனக்கு வர, நீயி கையில் காசில்லாமல் என்ன தொழில் செய்தாய் என்பதைத் தெரிவி. எல்லாம் மக்களை மொட்டை போட்டு உண்டாக்கியது தானே?
- கிருஷ்