சென்னை: தமிழகத்தில் கள்ள நோட்டுகளை ஒழிப்பது தொடர்பாக டி.ஜி.பி. லத்திகா சரண், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் தலைமையில் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ள நோட்டுகள் டாஸ்மாக் மதுக்கடைகளில்தான் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுகிறது. இந்த கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு விசேஷ பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும், அதுபோல் பொதுமக்கள் மத்தியில் கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



