இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: வேலைவாய்ப்பு மரண செய்தி ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் மகன் மாரடைப்பால் மறைவு!

ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் மகன் மாரடைப்பால் மறைவு!

altமுன்னாள் முதல்வரும், தமிழக நிதித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாண்டியனின் மகன் செண்பக பால் பாண்டியன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரரின் மகன் செண்பகப் பால் பாண்டியன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமது இரங்கல் செய்தியில் '' மாண்புமிகு நிதியமைச்சரும் அ.இ.அ.தி.மு.க பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் சகோதரர் திரு.பாண்டியன் அவர்களின் மகன் திரு. செண்பக பால் பாண்டியன் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்  துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அன்பு மகனை இழந்து வாடும் பாண்டியன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தியும் தெரிவித்துக் கொள்கிறேன் '' என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: