இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: அறிவிப்பு பிரிவுகள் பிரபல மலையாள எழுத்தாளர் சுகுமாரன் அழிக்கோடு மரணம்!

பிரபல மலையாள எழுத்தாளர் சுகுமாரன் அழிக்கோடு மரணம்!

சுகுமாரன் அழிக்கோடு மரணம்புகழ்பெற்ற  மலையாள எழுத்தாளர் சுகுமாரன் அழிக்கோடு இன்று திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.  அவருக்கு வயது 85. சுகுமாரன் அழிக்கோடு திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது கடைசி காலத்தை திருச்சூரில் கழித்து வந்தார்.

எலும்பு புற்று நோயால் கடந்த இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்த அவர்,  புற்றுநோய் தீவிரம் அடைந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், என பன்முகத் தன்மைகள் கொண்டவரான சுகுமாரன் அழிக்கோடு, சாகித்ய அகாடெமி, உள்பட இலக்கியத்துக்கான 12 விருதுகளைப் பெற்றவர்.  கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தராகவும் பணியாற்றி இருக்கிறார்.

மலையாள இலக்கிய உலகில் மிக முக்கியமானவராக திகழ்ந்த சுகுமார் கோழிக்கோடு, அரசியல் - சமூக நிகழ்வுகளில் மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்களை தைரியமாக எதிர்த்து கருத்துகளைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: