வயலூர் சுப்பிரமணியசாமி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா!

மார்ச் 26, 2018 785

வயலூர் (26 மார்ச் 2018): சோமரசம்பேட்டையை அடுத்த வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான 30-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். காலை முதல் பக்தர்கள் பால்காவடி எடுத்து வருவார்கள். அதனை தொடர்ந்து சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணி அளவில் சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

31-ந் தேதி அபிஷேகங்கள் நடைபெறும். ஏப்்ரல் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு வள்ளி நாயகியின் தினைப்புனம் காத்தல் விழா நடைபெறும். 2-ந் தேதி முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், அதன்பின் யானை விரட்டல் நிகழ்ச்சியும் நடைபெறும். 3-ந் தேதி உத்திரவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியான வள்ளி திருக்கல்யாணம் காலை 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் சிறப்புடன் நடைபெற உள்ளது.

விழா நாட்களில் பக்தர்கள் வந்து செல்ல அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு பஸ் வசதிகளும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாட்டினை அறநிலையத் துறை இணை ஆணையர் கல்யாணியின் ஆலோசனையின் பேரில் உதவி ஆணையர் ராணி, நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...