திருவண்ணாமலை சித்திரை திருவிழா தொடர்பில் அறிவிப்பு!

ஏப்ரல் 16, 2018 636

திருவண்ணாமலை (16 ஏப் 2018): திருவண்ணாமலை சித்திரை திருவிழாவை ஒட்டி அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வரும் 29 ஆம் தேதி திருவண்ணாமலை சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. அப்போது லட்சக் கணக்காண பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்க விரும்புவோர், வரும் ஏப்ரல் 16 முதல் 25 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...