ஜித்தாவில் நடந்த தமிழ் இஸ்லாமிய மாநாடு!

ஏப்ரல் 21, 2018 785

ஜித்தா (21 ஏப் 2018): சவூதி அரேபியா ஜித்தாவில் 13 வது தமிழ் இஸ்லாமிய மாநாடு வெள்ளியன்று மாலை ஜித்தா செனாயிய்யா பகுதியில் நடைபெற்றது.

மாலை 04 மணி முதல் இரவு 11:30 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மவுலவி இப்ராஹீம் மதனி, அஷ்ஷேக் நூஹ் அல்தாஃபி, அஷ்ஷெய்க் அஸ்ஹர் ஸீலானி, அஷ்ஷெய்க் அப்துல் வதூத் ஜிஃப்ரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்,இதர போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகளும் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் சிமார் 1000 த்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...