40 ஆண்டுகளுக்குப் பிறகு அயினாபுரம் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

ஜூலை 09, 2018 764

பாடாலூர் (09 ஜூலை 2018): அயினாபுரம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா நடத்துவது என கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழாவுடன் தேர்திருவிழா தொடங்கியது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயில் வளாகத்திலிருந்து தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. அப்போது பக்தர்கள் தேங்காய் சிறப்பு செய்து சாமி கும்பிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...