ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்!

ஆகஸ்ட் 13, 2018 629

விருதுநகர் (13 ஆக 2018): ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைப்பெறும் இந்த தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான இந்த ஆடிப்பூரம் நட்சத்திர நாளில் திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் இந்த ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து இன்று காலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைப்பெற்றது. பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் உற்சவர்களை தேருக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவிற்கு அருகாமை பகுதி பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்ததால், பாதுகாப்பு நலன் கருதி சுமார 1200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...