மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது!

ஏப்ரல் 08, 2019 811

மதுரை (08 ஏப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று முதல் 12 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

வரும் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் 8.24-க்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 16-ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17-ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெறுகிறது.

18-ம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டமும், 19-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...