புதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

ஜூன் 23, 2019 251

புதுச்சேரி (23 ஜுன் 2019): புதுச்சேரி பஞ்சவடீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (23.06.2019) நடந்தது.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், 36 அடி உயர, விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஜெயமங்கள மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி சன்னதிகளும் அமைந்துள்ளன. கடந்த மே மாதத்தில், ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு புதிதாக சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோவிலின் ஐந்து நிலை ராஜகோபுரம், கணபதி, பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, மூலவர் ஆஞ்ஜநேயர், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சன்னதி விமானங்களுக்கும், மூலவர்களுக்கும் மகா கும்பாபிஷேகம் இன்று (23.06.2019) காலை 9:00 மணிக்கு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...