திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ந்தேதி தொடக்கம்!

ஜூலை 30, 2019 604

திருப்பதி (30 ஜூலை 2019): திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.

அதையொட்டி செப்டம்பர் மாதம் 24-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

செப்டம்பர் மாதம் 30-ந் தேதி மாலை கொடியேற்றம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு பெரிய சே‌ஷ வாகன வீதி உலா, அக்டோபர் மாதம் 1-ந் தேதி காலை சிறிய சே‌ஷ வாகன வீதி உலா, இரவு அம்ச வாகன வீதி உலா, 2-ந் தேதி காலை சிம்ம வாகன வீதி உலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா, 3-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா, 4-ந் தேதி மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு கருட வாகன வீதி உலா.

5-ந் தேதி காலை அனுமந்த வாகன வீதி உலா, மாலை தங்க தேரோட்டம், இரவு யானை வாகன வீதி உலா, 6-ந் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதி உலா, 7-ந் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதி உலா, 8-ந் தேதி காலை சக்கர ஸ்தானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி, தினமும் காலை 9 மணியில் இருந்து, பகல் 11 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வாகன வீதி உலா நடக்கிறது. கருட வாகன வீதிஉலா (கருட சேவை) இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணி வரை நடக்கிறது.

வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சாமி சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...