அத்திவரதர் உற்சவம் - முன் கூட்டியே நடை சாத்தப்படும்!

ஜூலை 31, 2019 531

காஞ்சீபுரம் (31 ஜூலை 2019): அத்தி வரதரை தரிசிக்க பகதர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை. டோனர் பாஸ் மற்றும் வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும் போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம்.

அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதேசமயத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தினங்களில் மேலும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்த உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...