விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்!

செப்டம்பர் 03, 2019 572

கும்பகோணம் (03 செப் 2019): கும்பகோணம் அருகே திருப்புபுறம்பயத்தில் விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம் நடைபெற்றது. விநாயகரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனாய அருள்மிகு சாட்சி நாத ஸ்வாமி ஆலயம் உள்ளது. இங்கு தனி சந்நதி கொண்ட பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தியன்று தேனபிஷேகம் விடிய விடிய நடைபெறுவது வழக்கம்.

இந்த விநாயகர் வருண பகவானால் நத்தான் கூடு, கிளிஞ்சல், கடல் நுரையால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இங்கு நடைபெறும் தேனபிஷேக காட்சியை தரிசித்து வேண்டிடும் பிரார்த்தனைகள் அடுத்த ஆண்டு தேனபிஷேகத்திற்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் பிரளயம் காத்த விநாயகருக்கு சதுர்த்தி விழாவையொட்டி பக்தர்கள் வேண்டி வழங்கிய தேனால் அபிஷேகம் விடிய விடிய நடைபெற்றது.

விநாயகரின் சிரசில் ஊற்றப்படும் தேன் முழுவதும் விநாயகரின் உடல் உறிஞ்சிவிடும் என்பது கூடுதல் சிறப்பாகும். தொடர்ந்து விநாயகரின் சிறப்பை விளக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...