ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

அக்டோபர் 29, 2019 283

திருவாரூர் (29 அக் 2019): குருபெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நவக்கிரங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும்,நற்பலன்களை தரகூடிய கிரகமான குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடம்பெயர்ச்சி ஆவது குரு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நவக்கிரங்களில் குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 3 மணி 49 நிமிட அளவில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார்.

குருப்பெயர்ச்சியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...