அமெரிக்காவில் நடைபெற்று வரும் ‘தமிழர் கலை விழா’ நிகழ்ச்சியைக் கலக்கிக்கொண்டிருக்கிறது சென்னையைச் சேர்ந்த கவிஞர்.ஆரூர் புதியவனின் பாடல். `இதுவரையில் நான் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால், என்னுடைய பாடல்கள் தமிழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன' என நெகிழ்கிறார் புதியவன்.

ஒட்டு மொத்த இந்தியாவும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தண்ணீருக்காக பல ஆண்டுகள் போராடிக் கொண்டு இருக்கும் இச்சூழலில் மதம், இனம், ஜாதி பார்க்காமல் கூடி முடிவெடுத்து வெற்றி பெற்றிருக்கின்றனர் லால்பேட்டை மக்கள்.

சுமார் 100 நாட்கள் தொடர் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் மொத்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது.

"காலேஜ் முடிஞ்சு ஃப்ரெண்ட்ஸோடு வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்தேன். அப்போ, ரோட்டோரத்துல தாத்தா ஒருத்தர் சுருண்டு படுத்துக்கிடந்தார்.

ங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.

ரு திரைப்பட நட்சத்திரமாக, ஒட்டி வரும் மேட்டுக்குடி வாழ்க்கை, தனது பிரபலத்தை வைத்து தயாரிப்பு, திரைப்பட உருவாக்கம், வணிகம் அனைத்தையும் தீர்மானிக்கும் கமல், அரசியல் என்று வரும்போது என்ன நிலைப்பாடு எடுப்பார்?

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின் போது யாரெல்லாம் அவரோடு பயணிக்கிறார்கள் என்கிற விவரத்தைக் கோரி கடந்த மாதங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு தனிநபர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

உங்கள் கம்ப்யூட்டரில் யூடியூப் தளம் சென்று இடதுபுறமுள்ள ‘Trending’ பட்டனை அழுத்துங்கள். வரும் லிஸ்டில் முதல் பத்து வீடியோக்களில், ஏழு வீடியோக்களாவது புறம் பேசுவது, தவறாகப் பேசுவது, சகித்துக்கொள்ள முடியாத தகாத செய்திகளைப் பரப்புவது, கள்ளத் தொடர்பு செய்திகள், நடிகைகள் குறித்த கிசுகிசு, முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை முன்னிறுத்துவது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தவறான கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய நெருக்கடி என்று கூறுகிறது “லைவ் லா” இணையதளம்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!