கற்பு பறிபோகும் முன் இறந்துவிடுவதே மேல்: சிரியா பெண்ணின் கண்ணீர் கடிதம்! Featured

By இந்நேரம் December 15, 2016

சிரியா நாட்டில் அரசு ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை சுமார்மூன்றரை லட்சத்துக்கும்அதிகமான பொதுமக்கள் இந்தயுத்தத்தில் பலியாகி உள்ளனர்.எழுபது லட்சத்துக்கும்மேற்பட்டவர்கள் சொந்தநாட்டிலேயே அகதிகளாகவாழ்ந்து வருகிறார்கள்.

அலெப்போ நகரை மையமாக கொண்டு நடைபெறும் இந்தச்சண்டையைத் துயரத்தைத் தணிக்கும் விதத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சிரியா ராணுவமும்,கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதே மாதம் 19- ம் தேதி சிரியா ராணுவம்,கிளர்ச்சியாளர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. அதற்குகிளர்ச்சியாளர்கள் பதிலடிகொடுக்க... யுத்தம் மீண்டும் தீவிரம் பிடித்தது. கடந்த சில மாதங்களாக ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் சொல்லவியலாத துயரத்துக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் அலெப்போ நகரை எப்படியாவது கைப்பற்றி அங்கிருக்கும் கிளர்ச்சியாளர்களை வெளியேற்ற வேண்டும் என சிரியா ராணுவம் நகருக்குள் நுழைந்து தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. சிரியா ராணுவம் அலெப்போ நகரை ஆக்ரமித்தால், தங்களின் கற்பு பறிபோகி, கொல்லப்படுவோம் என அந்நகரப் பெண்கள்அச்சத்தில் உழல்கின்றனர். கடந்த புதன் (13-12-16)கிழமையன்று அலெப்போநகரைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் 'அலப்போ நகருக்குள் புகுந்த சிரியா ராணுவத்தால் என் கற்பு பறிபோய்,கொல்லப்படுவதை விட இறந்துவிடுவதே மேல்' என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடித்ததில்...

"அலெப்போ நகர் சிரியா ராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராணுவ உடையில் இருக்கும் அந்த மிருகங்களினால் நான் எனது கற்பை இழக்க நேரிடும். என்னைக் காப்பாற்ற எந்த ஆண் மகனும் இங்கில்லை, என்னைத் தற்காத்துக் கொள்ள என்னிடமும் ஆயுதங்களும் இல்லை. எனது உயிரைக் காப்பாற்றுங்கள் என்று நான் யாரிடமும் கெஞ்சவும் மாட்டேன். எனது கற்பைசூறையாடியபின் நான்கொல்லப்படுவதை, சமீபத்தில் இறந்த போன என் தந்தையால் தாங்கிக் கொள்ள முடியாது.எனது தற்கொலை உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என நான் நம்புகிறேன்.உங்கள் மனைவி,தாய்,மகள் போல் அல்லாமல், உங்களால் கண்டு கொள்ளப்படாத ஒரு பெண்ணின் தற்கொலையாவது உங்களை ஒன்றிணைக்கும் என நம்புகிறேன் அதனால் அந்த அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்பே நான் தற்கொலை செய்து கொள்வதுதான் சரியான முடிவு .நிகழவிருக்கும் பேராபத்தித்திலிருந்து என்னைத் தற்காத்து கொள்ளவே இந்த முடிவை நான் எடுக்கிறேன். அலெப்போ நகரில் இருப்பவர்களே, உங்களின் குடும்பத்தைப் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள். இந்தச் சமூகம் தரும் கோட்பாடுகள் எனக்கு அர்த்தம் இல்லாததாகவே இருக்கிறது. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன்." என்றுஎழுதப்பட்டுள்ளது.

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாரா.. இல்லையா?என்பது பெரும் கேள்விகுறிதான்?. தன் பெண்மையைக் காத்துக்கொள்ள முடியாத சூழலில் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கும் அவலம் நிகழ்வது, இந்த உலகில் பெண்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? எனும் கேள்வியை உரக்க கேட்க வைக்கிறது.

நன்றி: விகடன் 

Last modified on Thursday, 15 December 2016 17:01