மோடியின் அறிவிப்பு யார் போட்ட திட்டம்?

January 01, 2017

"கர்ப்பினிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு"

டிசம்பர் 31ஆம் தேதி இரவு பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் 50ஆம் நாளில் நாட்டுமக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குப் பெரும்பாலான ஊடகங்கள் வைத்திருந்த தலைப்புதான் மேலே உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் திட்டங்களைத் தன்னுடைய அரசின் திட்டங்கள் போலக் கூறிக் கொள்வதில் மோதிக்கு நிகர் எவருமில்லை. அவர்தான் அப்படிச் செய்கிறார் எனில் ஊடகங்கள்...? பிரதமர் என்ன சொன்னாலும் அதைச் செய்தியாக்கும் ஊடகங்கள், அவர் சொன்னதின் உண்மைத் தன்மையை அறிந்து அதைச் செய்தியாக்குவதில்லை.

2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தின் பெயர் Indira Gandhi Matritva Sahyog Yojana. 19 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் முதல் இரண்டு கர்ப்பக்காலங்களில் அவருக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையிலும் பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடைக் களைதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் இது.

2013ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013"ல் சேர்க்கப்பட்டு, கர்ப்பினிப் பெண்களுக்கு 6,000 ரூபாய் வரை ரொக்க உதவி வழங்க வகை செய்யப்பட்டது.

2014 ஜூலை மாதம் 5ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக்கோரி PUCL 2015ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்தத் திட்டத்தைதான் பண மதிப்பழிப்பு வெற்றி எனக் காண்பிப்பதற்காக, புதிதாக அறிவித்துள்ளது போன்று கூறியுள்ளார் மோதி.

மோதி அரசு இதுவரை அறிவித்துள்ள எந்தவொரு திட்டமும் (சமஸ்கிருதத் திணிப்பு போன்ற மக்கள் நலன் சாராத் திட்டங்கள் தவிர) சுயமான திட்டம் இல்லை என்பதே உண்மை.

ஆப்கி பார் காப்பி சர்க்கார்.

நன்றி அப்துல் கறீம்

தற்போது வாசிக்கப்படுபவை!