லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தும் அப்துல் சலீம் Featured

By இந்நேரம் April 14, 2017

ஞ்ச ஊழல்களின் உறை விடமாக அரசு அலுவலகங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன.

இதற்கு ஒரு தீர்வே இல்லையா? ஏழைகளையும் பஞ்ச பராரி களையும் வாட்டி வதைக்கும் இந்த கொடுமைகளுக்கு விடிவு காலம் எப்போது வரும் என ஏங்கி தவிக்கும் மக்களுக்கு அங் கொன்றும் இங் கொன்றுமாய் அரிதாக பாலைவன சோலையாக சிற்சில ஆறுதல்களும், இளைப் பாறுதலும் கிடைக்கின்றன.
நெஞ்சை நிமிர்த்தும் சலீம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போல சிலர் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்கின்றார். சகாயம் ஓரளவு அதிகாரம் மிகுந்த பொறுப்பில் லஞ்ச ஊழலுக்கு எதிராக அறப்போர் புரிகிறார் எனில் இந்தக் கட்டுரையின் கதாநாயகன் அப்துல் சலீம் உள்ளாட்சியில், பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து லஞ்ச ஊழலுக்கு எதிராக போர்ப்பரணி பாடி வருகிறார்.2014-ல் அவரது மேஜையில், மலையாள மொழியில் அறிவிப்பு ஒன்றை வைத்திருக்கிறார். உங்களுக்காக உழைக்க அரசாங்கம் நாளொன்றுக்கு 811 ரூபாய் தருகிறது. மாதத்திற்கு 24 ஆயிரத்து 330 ரூபாய் தருகிறது. எனது சேவையில் திருப்தி இல்லையென்றால் என்னிடம் நேரடியாகக் கூறுங்கள். இந்த வாசகங்கள் சமூக ஊடகங்களில் பரவி அவரை ஒரு கதாநாயகன் நிலைக்கு உயர்த்தியது. இங்கு கையூட்டு கொடுக்கத் தேவையில்லை என்ற வாசகம் அடங்கிய பட்டையை அனைவருக்கும் அணிந்து கொள்ளச் செய்திருக்கிறார். மேலும், எந்த அரசுப் பணியாக இருந்தாலும் சேவை மட்டுமே முக்கிய இலக்காகக் கொள்ள வேண்டும். பொது மக்கள் பல்வேறு சிந்தனைகளுடன் வருவார்கள், அவர்களை வெறும் கையுடன் திரும்ப அனுப்பக்கூடாது. அவர்கள் திருப்தியுடன் திரும்ப வேண்டும் என்கிறார் சலீம் .

மக்கள் மனதில் வாழ்கிறார்

அவரோடு சேர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் 17 பேர் பணி புரிகின்றனர். கண்காணிப்பாளர் ஐ.பி.பீதாம்பரம் சலீம் பற்றி கூறியபோது, சலீமைப் பொறுத்தவரை, அவரது பணியாக இல்லாவிட்டாலும் கூட பொதுமக்களுக்கு முன்வந்து உதவி செய்வார். அவர்களுடைய உரிமைகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் சலீமின் அணுகுமுறை இருக்கும் என்றார்.

கடந்த 2011&2012-ல் கேரள மாநிலத்தில் சிறந்த செயலர் விருது பெற்ற பஞ்சாயத்து செயலர் சித்தீக் கூறியபோது, சலீம் மொத்த பணியாளர்களுக்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை விதைத்தவர் என்றார். அதேபோல, பஞ்சாயத்து தலைவர் கேசவன், சலீமின் லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆக்கப்பூர்வ செயலை மனதாரப் பாராட்டிப் பேசி, சலீம் மற்ற அலுவலர்களைப்போல அல்ல, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் ப புரிந்து விட்டு தனது திருப்திக்காக மக்கள் பணியாற்ற இங்கே வந்துள்ளார் என்றும், சலீம் பணிக்கு வந்து 3 ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. ஆனால், அவர் எல்லோர் மனதிலும் ஏக காலத்திற்கும் நிறைந்து இருப்பார் என தெரிவித்துள்ளார்.

Source: மக்கள் உரிமை

Last modified on Friday, 14 April 2017 17:47