திப்புவை புகழ்ந்த ஜனாதிபதி;மெர்சலான பாஜக(VIDEO)! Featured

Friday, 27 October 2017 00:36 Written by  இந்நேரம்

திப்பு சுல்தான், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்தார். அவர் வளர்ச்சியின் முன்னோடியாகவும் திகழ்ந்தவர். திப்பு சுல்தான் மைசூர் பீரங்கிகளை போரில் பயன்படுத்தினார்.

பிற்காலத்தில் அதே தொழில்நுட்பத்தை இங்கிலாந்து அரசும் ஏற்று பயன்படுத்தியது."என்றும் மறக்கமுடியாத போராளிகளின் மண் கர்நாடகா என்று நம்முடைய ஜனாதிபதி திரு. ராம் நாத் கோவிந்த் கர்நாடக சட்டசபையான "விதன ஸவ்தா" மாளிகையின் வைரவிழா சிறப்பு கூட்டத்தில் பேசினார். இதை பேசியதும் அங்கிருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாக மேஜையைத் தட்டினார்கள்.

வீடியோ

இது நமக்கெல்லாம் தெரிந்த வீரன் திப்பு சுல்தானின் உண்மை வரலாறு தானே, இதற்கேன் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்று கேட்கலாம். ஆம், வருகிற நவம்பர் 10 ஆன் தேதி திப்புவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்திருந்தது. திப்புவின் பிறந்தநாள் அனுசரிப்பு கர்நாடக அரசசிலும் புதிதல்ல.

ஆனால் இதற்கு பாஜக மற்றும் அதன் ஆதரவு இந்துத்துவ இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கர்நாடகாவின் பல இடங்களிலும், மங்களூரிலும் சில விளிம்பு நிலை இயக்கங்கள், மாவீரன் திப்பு சுல்தான் மத அடிப்படைவாதி என்றும், இந்துக்களுக்கு எதிராக இருந்தார், படுகொலை செய்தார் என்றும் பல காலமாக பிரசாரம் செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகவில் எதிர்க்கட்சியான பாஜக வும் சித்தராமையாவின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பாஜக வின் ஆதரவு ஜனாதிபதி ஆனா திரு.ராம் நாத் கோவிந்த் திப்பு சுல்தானை புகழ்ந்து பேசி இருப்பது, பாஜக வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கடும் அதிருப்தியை கர்நாடக பாஜக தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் K S ஈஸ்வரப்பா, ஆளும் காங்கிரஸ் அரசு ஜனாதிபதியை தவறாக பயன்படுத்திவிட்டதாக சாடினார்.

"அவை நெறிமுறைகள் (protocol) அனுமதிக்கவில்லை. இல்லைஎன்ற்றால் ஜனாதிபதி பேசியபோதே வெளிநடப்பு செய்திருப்போம்" என்று மற்றொரு பாஜக தலைவர் ஆத்திரமாக கூறினார்.
இதற்க்கு பதிலளித்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், இப்படி பேசுவதற்கு பாஜக வெட்கப்பட வேண்டும என்றும், "ஜனாதிபதி அவர்கள் வேறொருவர் எழுதி தந்ததை பேசுகிறார்" என்று சொல்வதன் மூலம் ஜனாதிபதியையும் அவரது அலுவலகத்தையும் கேவலப்படுத்திவிட்டது பாஜக என்றார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி உரையை பாராட்டிய முதல்வர் சித்தராமையா, "ஒரு அரசியல் மேதை யின் உரை போல் அமைந்தது" என்று வாழ்த்தினார்.

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெட்கே வின் ட்வீட் ஓன்று பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதில் திரு ஹெட்கே : "conveyed Karnataka government not to invite me to the shameful event of glorifying a person known as a brutal killer, wretched fanatic and mass rapist," என்று வெளிப்படையாக திப்பு சுல்தானை விமர்சித்ததோடு, தன்னை திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான அழைப்பாளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று கர்நாடக முதல்விரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சொல்லியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

எல்லா எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட தியாகி, கிழக்கிந்திய கம்பெனிகளின் சிம்ம சொப்பனம், மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுவதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மிகவும் உறுதியாக உள்ளார். ஆனால், வெளியில் பாஜாக கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்து இதை எதிர்த்து வரும் நிலையில் ஜனாதிபதி யே திப்புவின் வீர வரலாறை புகழ்ந்து பேசியது, பாஜக வை ஒட்டுமொத்தமாக மெர்சலாக்கியுள்ளது.

என்னதான் பொதுவெளியில் அரசியல் தலைவர்கள் வரலாற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றி மாற்றி பேசி வந்தாலும், ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் அரச நெறிமுறைகளுக்குட்பட்டு கண்ணியத்துடன் ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே பேச முடியும்.

இந்த சம்பவம் அத்தகைய ஒரு எடுத்துக் காட்டு என்பதோடு, திப்புவிற்கு எதிரான கண்மூடித்தனமான விமர்சனங்களை பொய்யாக்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

-முஹம்மது ரமீம்

Last modified on Friday, 27 October 2017 01:22
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.