தாமதிக்கப்பட்ட நீதி மிகப்பெரிய அநீதிதான்!!

Share this News:

தாமதமான நீதி கண்டிப்பாக நீதி மறுக்கப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ளமுடியும்.

CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடியதற்கு கைது செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவி (கர்ப்பிணி பெண்) சபூராவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. பொதுசமூகத்திற்கு இது ஆறுதலான செய்தி என்று சமூக செயல்பாட்டாளர்கள் பெருமூச்சுடன் இணையங்களில் எழுதுவதை கவனிக்கமுடிகிறது.

இந்த விசயங்களில் முழு நீதி கிடைக்காவிட்டாலும், தாமதமாக ஆறுதலாக கிடைக்கப்பெற்ற ஜாமீனை நீதி கிடைக்கப்பெற்றது என்ற முறையில் இன்று பொதுசமூகத்தின் மத்தியில் பரப்புரை செய்யப்படுகிறது.

என்ன செய்தார் இந்த சபூரா?

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஜனநாயக ரீதியில் நடைபெற்றன. பல மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டங்கள் நடந்தது பின்பு சமூக இடைவெளி அவசியம் , கொரோன வேகமாக பரவும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்புசெய்தவுடன் சி.ஏ.ஏ போராட்டத்தை ஒதுக்கிவைத்தார்கள்.

இப்போராட்டங்களின் போது கடந்த பிப்ரவரியில் டெல்லியில் வன்முறை வெடித்தது. இம்மோதல் தொடர்பாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழக மாணவி சபூரா சர்கார் கைது செய்யப்பட்டார். இவர் கையில் இருந்த ஆயுதம் பேனா, பெரும் உருட்டுக்கட்டை , துப்பாக்கி ஏந்தி காவலர்களை சுட்டார்களே, அவர்கள் குறித்தான பல புகைப்படங்கள் இணையங்களில் சுற்றியதே, அவர்கள் குறித்து செய்திகள் எதுவும் இல்லை, ஆனால் வெறும் பேனா அறிவு ஆயுதம் கொண்டு போராடிய மாணவிற்க்கு கிடைத்து ஊபா சட்டம்.

ஆனால் அந்த ஜாமீன் அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. அதை இறுதியில் கூறுகிறேன். அதற்கு முன் சில விஷயங்களை மக்கள் முன் ஒப்பிட்டு காட்டவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

நாட்டை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவி செய்ததாக வலுவான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் DSP தேவேந்திரசிங் மீது டெல்லி போலீஸ் 90 நாட்களுக்குள் சார்ஜ் சீட் பதிவு செய்யவில்லை என்று குப்பை காரணத்தை கூறி ஜாமீன் அளித்துள்ளது நீதிமன்றம்.

இந்த தேவிந்தர்சிங் மீது கடந்த ஆண்டு கோரமாக கொல்லப்பட்ட 40 CRPF வீரர்கள் கொலை வரை சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை விசாரித்தால் பெரும் பெரும் ஆட்கள் தொடர்பு அம்பலாமாகும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு இருக்கும் இந்த DSP தேவேந்திரசிங் மீது உள்துறை அமைச்சர் #அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி போலீஸ் சார்ஜ் சீட் கூட பதிவு செய்யவில்லை. அதை ஏனென்று நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை.

இதே டெல்லி போலீஸ் மாணவி சபூரா விஷயத்தில் என்ன செய்தது தெரியுமா?…

“கர்ப்பிணி என்பதற்காகவெல்லாம் ஜாமீன் கொடுப்பதை ஏற்க முடியாது. அது எங்கள் விசாரணைக்கு இடையூறாக இருக்கும்” என்று கூறி 3 முறை நீதிமன்றத்தில் சபூரா ஜாமீனுக்கு எதிராக பேசி முட்டுக்கட்டை போட்டது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இறுதியாக இரண்டரை மாத பெரும் சட்ட போராட்டத்துக்கு பின்பு மனிதாபிமான பார்வையின் அடிப்படையில் (Humanitarian Grounds) ஜாமீன் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது.

நாட்டின் அரசிலமைப்பை இறையாண்மையை காக்கும் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவி சபூராவை ஆள்தூக்கி சட்டமான UAPA’வில் கைது செய்து கர்ப்பிணி என்றும் பாராமல் இரண்டரை மாதம் சிறையில் அடைத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி ஜாமீனுக்கும் முட்டுக்கட்டை போட்ட அமித்ஷாவின் காவல்துறையே!…

தீவிரவாதிகளுக்கு உதவி செய்த DSP தேவேந்திரசிங்கிற்கு எதிராக என்ன செய்தாய்?… ஏன் ஜார்ஜ் சீட் கூட போடவில்லை?

பல்வேறு கண்டனங்களுக்கு மத்தியிலேயே சபூராவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

அன்பன் ரஹ்மான்.


Share this News: