இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-4

954
CAA
CAA

ஆபரேஷன் கிளீன் அண்ட் பியூட்டிபுல் நேஷன்
1991ஆம் வருடம் பர்மாவில் ஆபரேஷன் கிளீன் அண்ட் பியூட்டிபுல் நேஷன் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதன் அர்த்தம் ரோஹிங்கிய முஸ்லிம்களை அனைவரையும் நாட்டைவிட்டு முற்றிலுமாக துரத்தியடித்து நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும். ஆகவே, இந்த சட்டம் நடைமுறைப்படுத்தபட்ட பின் ஜண்டா அரசாங்கம் ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவை விட்டு வெளியேற்றுவதில் மிகவும் தீவிரமாக செயலாற்றியது.

1991 மற்றும் 1992 ஆகிய இரு வருடங்களில் மட்டும் மொத்தம் 2,50,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். 1993 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2,30,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதன் பிறகும் தற்போது வரை தொடர்ச்சியாக ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மா அரசாங்கம் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது. வெளியேற்றப்பட்ட ரேஹிங்கிய முஸ்லிம் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்லி விடமுடியாது.

-இது போன்றதொரு சட்டம்தான் சிஏஏ 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம் 2019) எனப்படும் சட்டம். இந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தில் சொல்லப்பட்ட முக்கிய ஷரத்துக்கள்.. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் ஆகிய ஆறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறுகிறது.

-என்பிஆர் என்ற திட்டத்தின் மூலமாக சந்தேகத்திற்குறிய நபராக குறிக்கப்பட்டு பிறகு என்ஆர்சி மூலமாக அகதியாக அறிவிக்கப்பட்டவர்களிலிருந்து முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களுக்கு சிஏஏ எனப்படும் சட்டத்தின் மூலமாக குடியுரிமை வழங்கப்பட்டுவிடும். முஸ்லிம்கள் மட்டும் சட்டவிரோதமாக வந்தேறியவர்களாக அறிவிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவார்கள். அல்லது பலவந்தமாக நாடு கடத்தப்படுவார்கள்.

-எப்படி பர்மாவை ரோஹிங்கியா முஸ்லிம்கள் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மூன்று கொடுஞ்சட்டங்களை ஜண்டாக்காரர்கள் கொண்டு வந்தார்களோ அது போன்று இந்தியாவிலும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய மூன்று சட்டத்திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவை முஸ்லிமில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் இந்துத்துவாவினர் முயல்கின்றனர்.
ஆகவே பாஜக, பாசிச பாஜக என்று அழைக்கப்படுவது போன்று ஜண்டாயிச பாஜக என்றும் அழைக்கப்பட வேண்டும்.

இரண்டாவது பிரதான ஒப்பீடு நாளை!

பகுதி-1   பகுதி-2   பகுதி-3  பகுதி-5