துப்பில்லாத நிதிபதிகள்!

கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய சங்கதிகள் குறித்து, டி. பாசு வழக்கில் சொன்னவை எல்லாம் பின்பற்றப்படுகிறதா என அந்தந்த மாநில அரசுச் செயலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்ற நிதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும், இது வரவேற்கத்தக்கது என்ற ரீதியில், சமூக ஆர்வலர்கள் என்றப் பெயரில் அலையும், சட்ட அறிவில்லாதவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய சாசனக் கோட்பாடு 141 இன்படி, தாங்கள் சொல்லுந் தீர்ப்பானது, சட்ட விதிகளில் இல்லாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில், இந்திய சாசனக் கோட்பாடு 142 இன்படி, அத்தீர்ப்பினை பாராளுமன்றம் அல்லது குடியரசுத்தலைவர் சட்டமாக அறிவிக்க வேண்டுமென கேட்க வேண்டும்.

இப்படி அறிவிக்கப்பட்ட மற்றும் மத்திய அரசால் இயற்றப்பட்ட மத்திய சட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்துகின்றனவா என்பதை, மத்திய அரசின் நிர்வாகத்தை அதிகாரமுள்ள குடியரசுத் தலைவரோ அல்லது அவருக்காக ஊழியம் புரியும் மத்திய சட்டத்துறை செயலர்கள்தான் கண்காணிக்க வேண்டும்.

இன்னுங் கொஞ்சம் வெளிப்படையா புரியிற மாதிரி சொல்லனும்னா, உங்களது அதிகார ஆவணங்களை நீங்கள்தானே பாதுகாப்பீர்கள்! அடுத்தவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்தானே? ஆகையால், உச்சமட்ட நிதிபதிகளின் உத்தரவை, கீழ்மட்ட நிதிபதிகள்தானே கண்காணிக்க வேண்டும்??

ஆனால், இதனைச் செய்வதில்லை என்பதோடு, தங்களின் தீர்ப்பு சட்டமாக இயற்றப்பட வேண்டுமென எந்த கூறுகெட்ட நிதிபதிகளுஞ் சொல்வதில்லை.

மேலும், இப்படி சொல்லமுடியாததற்கு காரணம், நிதிபதிகளே சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லாமல், தங்களைப் போன்ற கூறுகெட்ட நிதிபதிகள் ஒவ்வொருவரும் மனம் போன போக்கில் சொன்னத் தீர்ப்புகளில் இருந்து, கர்நாடக உயர்நீதிமன்ற நிதிபதி கூட்டல் குமாரசாமி போல, தாங்கள் வாங்கிய லஞ்சத்துக்கு ஏற்றபடியுள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டியல்லவா தீர்ப்புரைக்கிறார்கள்.

கோடிக்கணக்கான வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் ஒன்றிரண்டு இருந்தாலே பெரிது. மற்றவை எல்லாம், ஏதோவொன்றைக் கொடுத்து வாங்கப்படுந் தீர்ப்புகளே!

ஆகவே, நாங்கள் பிறப்பித்த உத்தரவு சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, அந்தந்த மாநிலத்தின் செயலர்கள் பதிலலிக்க வேண்டுமென உத்தரவு போடுவார்கள்.

ஏனெனில், மத்திய அரசுச் செயலர்கள் உச்சநீதிமன்ற நிதிபதிகளின் உத்தரவுகளை அவ்வளவாக மதிப்பதில்லை. அதனால், மாநில அரசுச் செயலர்களை மட்டுந்தான், இப்படியெல்லாம் மிரட்டிப் பார்க்கலாம் என எண்ணத்தோன்றும். இதேபோல, மாநில அரசுச் செயலர்கள், உயர்நீதிமன்ற நிதிபதிகளின் உத்தரவுகளை மதிப்பதில்லை.

இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், ‘‘இந்நிதிபதிகள் எப்படி குறுக்கு வழியில் பதவிக்கு வந்தார்கள்’’ என்பது, எல்லா அரசுச் செயலர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதுதான்.

அரசுச் செயலர்களுங்கூட அப்படித்தான் குறுக்கு வழியில் பதவிக்கு வருகிறார்கள் என்றாலுங்கூட, பல்வேறு பாட்டங்களை உடைய இந்திய ஆட்சிக்கான ஊழியத்தேர்வில் தேர்ச்சி பெற்றல்லவா வருகிறார்கள். இது அவர்களுக்கான அடிப்படைத் தகுதியாகி விடுகிறது. ஆனால், நிதிபதிகள் சட்டத்திலேயே தேர்வதில்லை. இதுபற்றி, நீதியைத்தேடி… சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில் எழுதியுள்ளேன்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழான தண்டனைகளை, நிதிபதிகள் சாதாரண பொதுமக்களுக்குத்தான் நிறைவேற்ற முடியுமே தவிர, அரசுச் செயலர்கள் மட்டத்தில் அன்றன்று; சாதாரண அரசூழியரிடம் கூட செயல்படுத்த முடியாத அளவிற்கு துப்புகெட்டவர்கள் என்ற நிலையில்…,

எந்த அரசுச் செயலரும், ‘‘நீங்கள் பிறப்பித்த உத்தரவுகளை எங்களது மாநிலத்தில் பின்பற்றவில்லை’’ எனப் பதில் சொல்ல முட்டாள்கள் அல்லவே. எனவே, மாநில அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாட நியமிக்கப்பட்டுள்ள
அரசுப் பொய்யர்களின் ஆதரவோடு, தெளிவானதொரு பொய்யறிக்கையை தாக்கல் செய்துவிடுவார்கள்.

ஆகையால், இந்த வழக்கைப் பொறுத்தவரை, குடிமக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என ஆராய்ந்தால், மயிரளவிற்கு கூட பயனில்லை. மாறாக, கோடிக்கணக்கான பணமும், நேரமும்தான் விரயம்.

ஆனால், என்னைப் படைத்த இயற்கைக்கே இல்லாத அதிகாரங்கள் கூட, தங்களுக்கு இருப்பதுபோல பெற்றுப் பீலாக்க(லை, ளை) விட்டு அற்பத்தனமான ஆனந்தத்தை அடிமை நிதிபதிகள் அடைகிறார்கள். அவ்வளவே!

சரி, இதற்கு நம்ம பாணியில தீர்வென்ன எனக் கேட்டால், நாங்கள் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை எனில், எங்களுக்கு தகவல் சொல்லுங்கள் என நிதிபதிகள், மக்களை கேட்டுக் கொள்வது மட்டுந்தான். நிதிபதிகளே கேட்கவில்லை என்றாலுங்கூட, முறையற்ற கைதால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிபதிகளுக்கு நேரடியாகவே பதில் சொல்வதுதான்.

தற்போது வாசிக்கப்படுபவை!