கள்ளக்காதலில் முடிவுறும் மூவர் வாழ்க்கை!

​சம நிலையில் இருக்கும் தண்ணீர் தனது தர்மத்தைக் காக்க, ‘‘தன்னுள் (விழு, வீழ்)ந்தவனை இரண்டுமுறை பிழைத்துப்போ என தானாகவே மேலே தூக்கி விடுமாம்.

அதற்கு மேலும் அவனால் தப்பித்துச் செல்ல முடியவில்லை என்றால் மட்டும் இனி நீ இருப்பதே பிரயோஜனமில்லாத ஒன்று’’ என உள்ளே அமுக்கி உயிரை விடச் செய்யுமாம். இப்படித்தான் முடிந்திருக்கிறது, சென்னையில் ஒரு கள்ளக்காதல் கொலை.

ஆமாம், தொழில் முறைப்பொய்யர் ஒருவர், தன் மனைவின் கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘‘தான் செய்த தர்மமே, தன்தலையைக் காக்கும்’’ என்பது முதுமொழி. பொய்யர்களின் தொழிலைச் செய்தவர், அதிலும் தன்னைவிட மேலானப் பொய்யர்களான நடிகர், நடிகைகளின் வழக்கக்களில் அதிக கவனஞ் செலுத்தியுள்ளவர், நிச்சயம் தர்மத்தைக் காத்திருக்க மாட்டார். ஆகையால்தான், தர்மமும் அவரைக் காக்காமல், இரண்டு வாய்ப்புக்களை வழங்கியப்பின் கைவிட்டு விட்டது.

இக்கொலை குறித்து எதற்கும் பிரயோஜனம் இல்லாத பலவாறான செய்திகள் வழக்கம்போலவே ஊடகங்களில் வருகின்றன. இதில் கள்ளக்காதல் மனைவி, தன் கொலைகாதல் லீலை பேச்சுக்களை எல்லாம், ஒலிப்பதிவு வேறு செய்து வைத்து உதவியிருக்கிறாள். அதன் முக்கிய கூறுயிது!

//லோகேசினி: என்னை யாரோ கொலை செய்ய திட்டம் போட்டிருக்காங்க. வெளிய போகவே பயமா இருக்குன்னு சொல்லி அவரு வீட்டுக்குள்ளயே கிடக்கார். அவரை கொலை செய்ய நாம போட்ட திட்டம் தெரிஞ்சுபோச்சோன்னு எனக்கு பயமா இருக்கு. எந்த விஷயமும் தெரிஞ்சுடாம பாத்துக்க…. நேத்து நைட் முழுக்க பயந்துட்டே இருந்தாரு. என்னை தூங்கவே விடலை. புலம்பிட்டே இருந்தாரு. யாரோ என்னை நோட்டம் பாக்கிறாங்க. இதை செய்றது யார்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன்னு சொல்லிட்டே இருந்தார். நான்தான் அவர் கவனத்தை திசைதிருப்பி, ஒருமாதிரி
சமாதானம் பண்ணினேன்.

சண்முகநாதன்: அதுபத்தி எல்லாம் கவலைப்படாதடா செல்லக்குட்டி. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அவன் (முருகன்) எங்க போறான்றதை மட்டும் கண்காணிச்சு எனக்கு சொல்லிட்டே இரு. லோகேசினி: இப்ப இருக்கிற வீடு ராசி இல்லை. நாளைக்கே வேற வீடு பாத்துப் போயிருவோம்னு சொல்லிட்டு இருக்கார்.

சண்முகநாதன்: அவன் எத்தனை வீடு பாத்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க போறதில்லை. அதுக்குள்ள அவனை கவனிச்சுருவேன். நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் சேந்திருப்போம். கலங்காம இரு கண்ணு. ஆமா.. மாப்பிள்ளை (முருகன்) பார்சலில் எதையோ வாங்கி வந்தாரே.. என்ன விசேஷமா.. ஏதாவது மல்லிகை பூ, அல்வா வேலையா…

லோகேசினி: சீச்சீ… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அதெல்லாம் நாளாச்சி. கண் வலிக்குதுன்னு சொன்னார். நான்தான் கண்ணுக்கு மருந்து போட்டு விட்டேன். இப்ப நல்லா தூங்குறார். சண்முகநாதன்: இதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே… இப்படி பேச்சு நீள்கிறது. இந்த ஆடியோவை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.//

கொலையுண்டவர் தொழில் முறையில் தன் சாதிப்பொய்யர் என்பதால், கள்ளக்காதல் மனைவிக்கும், கள்ளக்காதலனுக்கும் நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

கூடவே, தங்களது தொழில் முறையின்படி, நீங்களிருவரும் வழங்கிலிருந்து விடுதலையாகி விடலாம். ஆனால், அதற்கு அதிக செலவாகும் (அரசுப் பொய்யருக்கும், நிதிபதிக்கும் பங்கு தரவேண்டுமென்பது உட்பொருள்) என்றுகூறி அவர்களது மொத்த சொத்தையும் வழிபறி செய்து விடுவார்கள். அநேகமாக, இது குற்றச்சாற்றுக்களைப் பதிவுசெய்வதற்கு முன் பிணையில் வருவதற்கே நடந்துவிடும்.

மேலும், கள்ளக்காதல் மனைவியை, ‘உட்கார் என்றால் உட்காரனும், படு என்றால் படுக்கனும்’ என வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று சொல்லுமளவிற்கு நிதிபதிகள் உள்ளிட்டோரிடம் இன்னும் எத்தனையெத்தனையோ கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இவர்கள் தங்களுக்காக வாதாட பொய்யினிகளைப் படித்தாலுங்கூட, இதுதான் நடக்கும். இதில் காவலூழியர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், இதெல்லாம் தெரியாமல், கள்ளக் காதலனும், காதலிலும் இந்தச் சிறையில் இருந்து அந்தச் சிறைக்கும்; அந்தச் சிறையில் இருந்து இந்தச் சிறைக்கும், ‘இவ்வழக்கில் இருந்து விடுதலையாகி நாம் எப்படியெல்லாம் வாழப்போகிறோம்’ என்பதுபற்றி, இனிப்பான காதல் கடிதங்களை எழுதிக் கொண்டிருப்பார்கள்.

இவைகள் அனைத்துக்குமான சமிக்ஞைகள்தான், ‘பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவது குற்றமல்ல’ என்பன போன்ற நிதிபதிகளின் கருத்துக்கள். இதற்குப் பதிலாக, ‘‘தன் கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்வது குற்றமல்ல’’ என்று கருத்தை சொல்லி கைது செய்யாமலேயே விட்டுவிடலாமே! இப்படி விட்டு விட்டால் தாங்கள்
நினைத்த பாலியல், பணம்பறிப்பு உள்ளிட்ட கள்ளக் காரியங்களைச் செய்ய முடியாதே, அதான்!!

காவலூழியர்கள், அரசுப் பொய்யர்கள், நிதிபதிகள் என அனைவருமே மதில்மேல் பூனையாகத்தான் இருப்பார்கள். தங்களின் எண்ண நிறைவேற்றலுக்கு தக்கவாறு, மயிருக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, எப்பக்கம் வேண்டுமானாலும் குதித்து விடுவார்கள்.

நாங்கள் தெய்வமாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இப்படியெல்லாங்கூட செய்வார்களா அப்பாவியாக கேட்காதீர்கள். என்னிடம் உள்ள ஆதாரங்களை எல்லாம் பார்த்தால், அடப்பாவிகளா என்பீர்கள்.

ஆமாம், விபச்சாரிகள் கைதுசெய்யப்பட்டால், அவர்களுக்கு பொய்யர்கள் எப்படியெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பிணை மனுவை தாக்கல் செய்து, பிணையில் வந்ததும் அவர்களை வைத்து கள்ளக்குடும்பம் நடத்துவார்கள்..,

தங்களுக்கு மேலான நிதிபதிகளின் எங்களின் ஊழியப்பொறுப்பு பகுதிக்கு வந்தால், அவர்களுக்கு மது, மாது உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்டு, நிதிபதிகளிடம் நிலவும் பல்வேறு சங்கதிகளை பற்றியெல்லாம், அந்நிதிபதிகளால் பாதிக்கப்பட்ட நிதிபதியொருவர் எனக்கு ஒலி ஒளி பேட்டியே கொடுத்துள்ளார்.

இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரிந்தால், யாரும் அவ்வளவாக கள்ளக்காதலில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபட்டாலம் கொலைச் செய்யும் அளவிற்கு போகமாட்டார்கள். ஆனால், இதையெல்லாம் ஆராய்ந்து எடுத்துச் சொல்லத்தான் ஆட்கள் இல்லையே ஒழிய, இதுபோன்ற செய்திகளை மூலதனமாகக்கொண்டு பணம் பறிப்பவர்களே அதிகம்.

கள்ளக்காதலில் ஆண்கள் புத்திசாலி என்றால், பெண் அதிபுத்தி சாலிகள். ஆகையால், கள்ளக்காதலை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே இன்பம். இல்லையேல், அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கொலைச் செய்யப்படுவார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். மொத்தத்தில் மூவரின் வாழ்க்கை முடிந்தது.

இதுகுறித்த விரிவான விவரங்களுக்கு நீதியைத்தேடி… சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் படிக்கலாம். நீதியைத்தேடி… சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களைப் பெற 9842909190 என்ற உலாப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளுங்கள். சட்டமறிந்து, சந்தோசமாய் வாழுங்கள்.

- வாரண்ட் பாலா

தற்போது வாசிக்கப்படுபவை!