கப கப என்று பசிக்க வேண்டுமா?: இதை சாப்பிடுங்கள்! Featured

சிலர் பசியின்றி அவதி படுவார்கள். என்ன காரணம்? என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே இலகுவாக தயாரித்து இந்த மருந்தை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

மிளகு - 20 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி - தலா 10 கிராம்,
ஓமம் - 20 கிராம்,
துளசி உலர்ந்தது - ஒரு கைப்பிடி,
உலர்ந்த கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி,
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கறுப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் ஒன்றின் பின் ஒன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்து 1 கப்பாக வற்றியது இறக்கி பருகவும்.

* சூப்பரான மூலிகை சூப் தயார்.

* இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும். அஜீரண பிரச்சனை தீரும்.

* இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

 

Rate this item
(0 votes)