ரம்ஜான் நோன்பும் உடல் ஆரோக்கியமும்! Featured

Friday, 26 May 2017 22:36 Published in நலவாழ்வு

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு வளைகுடா உள்ளிட்ட நாடுகளின் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்குகிறது. இந்தியாவில் சனிக்கிழமை இரவு தொடங்குகிறது.

இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அதிகாலை முதல் மாலை(சுபுஹு பாங்கு முதல் மஃரிப் பாங்கு வரை) உண்ணாமல், குடிக்காமல் இருப்பர். இதுபோன்று சுமார் 30 நாட்கள் தொடர்ந்து கடைபிடிப்பர்.

இது முஸ்லிம்களின் ஒரு வழிபாடு என்றாலும் இதனால் கிடைக்கும் சில உடல் ஆரோக்கியமும் ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவுபெற்றுள்ளது.

அதில் முக்கியமாக, நோன்பு இருப்பவர்களின் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. அதாவது சில மணி நேரங்கள் உடல் உணவின்றி ஓய்வெடுப்பதால் வெள்ளை அணுக்கள் அதிகரிக்க வாய்பு கொடுக்கப் படுகிறது. இது பாக்டீரியாக்கள், வைரஸ் உள்ளிட்டவைகள் உடலில் சேராமல் பார்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

மேலும், உடலில் உள்ள கொழுப்பு கரைகிறது. பொதுவாக எதுவும் சப்பிடாமல் இருந்தாலே கொழுப்பு தானாக கரையும், அதிலும் சுமார் 30 நாட்கள் உணவு கட்டுப்பாடு இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் விரைவில் கரைய வாய்ப்பு உள்ளது.

மேலும் உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு ரம்ஜான் நோன்பு வரப்பிரசாதம். அதாவது உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாக நோன்பு காலம் முடிந்து தொடர இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

மேலும் சில வகை கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள்(சிகெரட், மது உள்ளிட்டவைகள்) ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பதால் அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும் ரம்ஜான் நோன்பு முடிந்து அதனை மறந்து புது வாழ்க்கையை தொடங்கலாம்.

அதேபோல உடல் ஹார்மோன் சுரப்பிகளும் சீராக தன்னை சரிபடுத்திக் கொள்ள ரம்ஜான் நோன்பு உதவுகிறது.

During Ramadan Muslims are praying, generosity and sacrifice. Not only spiritual benefits but also health benefits are linked with fasting during Ramadan. Few of the health benefits.

Last modified on Friday, 26 May 2017 22:45
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.