கறிவேப்பிலை மிளகு சாதம் Featured

Sunday, 28 May 2017 05:12 Published in நலவாழ்வு

கறிவேப்பிலை மிளகு சாதம். இது இருமலுக்கும் நல்லது பசியையும் தூண்டும்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - ஒரு கப் + தாளிக்க
மிளகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு - தேவையான அளவு,

செய்முறை :

* வாணலியில் மிளகைசேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

* பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

* அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

* அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

* வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.