முதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12! Featured

Tuesday, 20 October 2015 16:09 Published in நலவாழ்வு

ந்த அட்சய / அதிசய தொழிலை பற்றி தெரிந்து கொள்ளும்  முன் ஓர் சிறிய கணக்கு:

தங்களிடம் உள்ள நாட்டு கோழிகளின் எண்ணிக்கை——— : 4
ஒரு கிலோ ரூபாய் தீவனம் ——————————————-: 25 ரூபாய்
ஆனால் பயன்படுத்தப்படும் தீவனம்  அளவு நாள் ஒன்றுக்கு: 100 கிராம்
அதன் மதிப்பு ( தீவனம் ) ————————————————-: 2.50
கிடைக்கும் முட்டை தோராயம் —————————————: 2
அதன் மதிப்பு —————————————————————–: 30 ரூபாய்
ஒரு நாள் செலவு————————————————————: 2.50
ஒரு நாள் வருமானம் —————————————————–: 30 ரூபாய்
ஒரு நாள் நிகரஇலாபம்—————————————————-: ரூபாய் 27.50 பைசா

அதாவது முதலீடு ரூபாய் 1, வருமானம் ரூபாய் 12

நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ்க்கு, இயற்கை முறையில் நாட்டு கோழி  வளர்த்து வரும்  திருநெல்வெலியை சார்ந்த திரு.சங்கர் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட தொழில் ரகசியமும், செயல் முறைகளும் கீழ் காண்போம்:

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த திரு.சங்கர் அவர்கள், சிறிய விபத்தின் காரணமாக தாயகம் திரும்பி வந்தார். இங்கு வந்து என்ன செய்யலாம் என்று எண்ணிய பொழுது அவர் வீட்டிலயே இங்கும், அங்கும் அலையும் கோழிகளை பார்க்கும் போது அவருக்கு, அந்த சிந்தனை வந்தது. முன்னதாகவே நாட்டு கோழியின் முக்கியத்துவம் மற்றும் அதன் எதிர்கால தேவைகளை அறிந்து வைத்து இருந்தால், வீட்டிலயே 10 கோழிகளை கொண்டு தொடங்கிய பண்ணை இன்று 150 கோழிகளுடன் மாதம் 40000 ரூபாய் வருமானம் பெறும் அளவிற்கு ஒரே வருடத்தில் உயந்து உள்ளார்.

இப்போது, தன் பண்ணை முட்டைகளுக்கு தர சான்று இதழ் பெற விண்ணப்பித்து உள்ளார்.

மேலும் இவரே போல் இயற்கை முறையில் கோழி பண்ணை தொடங்க இருப்பவர்களுக்கு பயிற்சிஅளித்து, கோழி குஞ்சுகளும் மொத்தமாக, சில்லரையாக தமிழ் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

இந்த தொழிலில் அதிக இலாபம் பெரும் வழிமுறைகளை திரு.சங்கர் அவர்கள் கூற கீழ் காண்போம்:

    நாட்டுகோழி லாபகராமாக இருக்கும்.எப்படினா:
    புறக்கடை நாட்டுகோழி மின்சாரம் தேவை இல்லை
    வேலைக்கு ஆள்கூலி தேவை இல்லை
    தீவனம் செலவு மிக குறைவு.
    புல்,பூண்டு,காய்கறிகழிவு,அசோலா,ரேசன்அரிசி,கோதுமை.,கரையான்,எறும்பு,பழையசோறு,அரிசிதவிடு,கீரைகள்,முட்டைதோடு,அழுகிய தக்காளி,இவை போட்டு வளர்க்கலாம்.
    கோழி எளிதில் பணம்ஆக மாற்றாலாம்.
    கோழி மூலம் எவ்வளவு இலாபம் வந்தலும் அரசு வரி கட்டதேவை இல்லை.
    கோழி எளிதில் நோய் வரது
    உணவு சம்பந்த பட்ட துறை என்று அழிவு இல்லை அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிகை அதிகமாக போகும் தவிர குறையாது.
    பட்ட படிப்பு படிச்சு இருக்கனும் அவசியம் இல்லை
    முட்டை,கோழி குஞ்சு,விடைக்கோழி,முட்டைக்கோழி, சேவல் கோழி எச்சம், எல்லாம் காசு தான்.
    குழந்தை,கர்பிணிபெண்கள்,வயது அதிகமானவர்கள்,ஆண்அழகர்கள்,இருக்கு வரை லாபம் குறை இருக்காது.
    கோழி வேலை நிறுத்தம்,சம்பளம் உயர்வு,போனஸ்,எதுவும் கேட்காது.ஆகையால் நம்ம வளர்ச்சி தடுக்க முடியாது.
    இந்த தொழில் மனஅழுத்தம் இருக்காது.சந்தோசம் அதிகமாக இருக்கும்.
    உற்பத்தி செஞ்ச முட்டையே,கோழியோ உடனே விற்கணும் அவசியம் கிடையாது.முட்டையை குஞ்சு ஆக்கலாம் இல்லா, ஊறுகாய் போடலாம்,கோழி தீவனம் போட்டு வளர்த்து விடலாம்.
    இந்த தொழிலை பார்த்து கொண்டே வேர தொழில பார்க்கலாம்.இல்ல படுத்து துங்கலாம்.
    கோழி தீவனம் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி கொள்லாம் 10,,15ஆண்டு ஒரே விலை இருக்கு.
     எற்றுமதி,மற்றும் பதப்படுத்தி விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கு.
    அதிக இடம் வசதி தேவை இல்லை. நிலம் ஒத்திக்கு எடுத்து பார்க்காலாம்.
    தண்ணீர் அதிகமாக தேவை இல்லை.
    சுற்றுசுழல் எந்த பாதிப்பு இல்லை
    நைட்டு சீப்டு பார்க்க தேவை இல்லை
    ஒரு வாரம் சுற்றுலா போகணும் என்றாலும் அடுத்தவர் பார்த்து கொள்ள.சொல்லி சென்று விடலாம்
    பெரியா மூதலிடு தேவை இல்லை.10000இருந்த போதும்.
    அரசு மானியம் விலை மின்சாரம் தருகிறது.
    உடல் உழைப்பு இல்லை
    அசோலா வளர்க்கிறதாலா கொசு தொல்லை இல்லை, தூக்கம நல்ல வரும்
    கிணத்துலா வருடம் மூலுவதும் தண்ணீர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.மூணு
    வருடம் காட்டுலா பச்சை இல்லானாலும் கவலை இல்லை.3 வருடம் தேவையாண தீவனம் சேமித்து வைத்து கொள்லாம்.
    உற்பத்தி கோழி, முட்டை, துரத்தி துரத்தி விற்க தேவை இல்லை,தேடி,தேடி வருவங்க:
    பெட்ரோல் விலை அதிகமானல் கவலை இல்லை.

உண்மை நாட்டு கோழி வளர்த்தால் வாழ்வு நிச்சயம்.
பண்ணை கலர் பிராய்லார் வளர்த்தால் சாவு நிச்சயம்

இந்த ஐடியா microsoft கம்பெனி தெரிந்தால் Computer தொழில் விட்டுடூ நாட்டுகோழி மோய்க்க வந்துவிடுவார்.பில்கேட்ஸ். இது சிரிக்க இல்லை சிந்திக்க::!

பண்ணை கோழி முட்டை நம்ம நாட்டுலா (18.10rs) விற்கிறாங்க. நம்ப முடியால (thehappyhensfarm) googleலா பாருங்க. இது கம்பெனி ரேட்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!


தொடர்புக்கு :
திரு.சங்கர் அவர்கள்
அலைபேசி: 81447 49372

- நன்றி: சிறு தொழில் முனைவோர்

Last modified on Tuesday, 20 October 2015 13:15
Comments   
0 #6 sundar 2017-11-28 13:50
மதுரையில் அல்லது மதுரைக்கு மிக அருகில் ஒரு நாள் அல்லது ஒரு வார நாடு கோழி குஞ்சிகள் கிடைக்கும் இடங்கள் இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே
Quote
-1 #5 மாணிக்கம் 2017-08-09 23:22
எனக்கு சிறுவிடை கோயி குஞ்சுகள் வேண்டும்.தொடர்பு எண் 9659541245
Quote
+1 #4 ஐயப்பன் 2017-07-10 08:23
எனக்கு ஒரு 100 கோழி குஞ்சு வேண்டும்.
கும்பகோணம் எனது ஊா்
தொடா்புக்கு
9159154513
Quote
0 #3 Krishnan 2017-04-20 10:53
நாட்டு கோழி குஞ்சு வாங்க அணுகவும்
கிருஷ்ணன்
திருச்செங்கோடு
8940476876

ஒரு வார குஞ்சு முதல் ஒரு மாத குஞ்சு வரை கிடைக்கும்.

நாங்கள் நாட்டு கோழியை பரவலாக காட்டில் விட்டு தான் வளர்க்கிறோம், தற்போது மாதம் 200 குஞ்சுகள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. நேரில் வந்து குஞ்சு தரத்தை பார்த்து வாங்கலாம்.
Quote
+4 #2 Muthukumar V 2017-03-25 22:23
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
தொடர்புக்கு -9944209238
Quote
-1 #1 Felix raja 2017-03-06 22:26
nice, planing to make a form at home
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.