ஜன..கன..மன என்ற இந்தியதேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம்ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடுசுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசியகீதம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் கடந்த 1950-ம் ஆண்டுஜனவரி 24-ம் தேதி இந்தியதேசிய கீதமாக, நோபல் பரிசுபெற்ற வங்க கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் எழதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்புசட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம், ஓங்கி ஒலிக்கப்பட்டு விட்டது.
முதன்முதலாக கடந்த 1911-ம் ஆண்டுடிசம்பர் 27-ம் தேதி மேற்குவங்கமாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ்மாநாட்டின் போதே ஜன. கன.மன ஹதி. நாயக. ஜேயஹே...என துவங்கும் தேசிய கீதம்பாடப்பட்டது. மொழி, இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் என்பதை இந்திய தேசிய கீதம் வலியுறுத்துகிறது.
எனவே நாம்அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடையாளம்காண, நாட்டில் அரசு மற்றும் தனியார் விழாக்களிலும் பள்ளிகளும் இந்தியதேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.
"நான் இந்தியன்" என்பது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் எப்போதும் ஒலிக்கும் மந்திரம் ஆகும். அது போல் இந்தியர்களாகிய ஒவ்வொருவரின் தேசப்பற்றையும் காண்பிக்கும் வகையில் ஜன..கன.மன தேசிய கீதம், ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
-இந்தியன் க.கா.செ
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|