காரைக்கால் (19-07-16): காரைக்கால் மார்க் கப்பல் துறைமுகத்தில், நேற்று பகல் ரூ.50 கோடி மதிப்பிலான ராட்சத கிரேனில் தீ விபத்து ஏற்பட்டது. 5 தீயணைப்பு வாகனங்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தது.

காரைக்கால் (19-07-16): உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, துறைவாரியான நடவடிக்கை பாயும் என புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெர்லின் (19-07-16): ஜெர்மனியில் ரெயிலில் கோடாரியால் தாக்குதல் நடத்திய ஆப்கான் அகதி சிறுவனின் அறையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத கொடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாட்னா (19-07-16): பீகாரில் நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் 10 கமாண்டோ வீரர்கள் பலியாகினர்.

கோவை (19-07-16): சோலார் பேனல் மோசடி வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கு தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹைதராபாத் (19-07-16): ஹைதராபாத் பல்கலைகழகத்தில் வேறு மாணவன் என நினைத்து சீக்கிய மாணவன் ஒருவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீ நகர் (19-07-16): காஷ்மீரில் ஆளும் பிடிபி - பாஜக கட்சியின் முதலமைச்சர் மெஹ்பூபா காஷ்மீரின் முக்கிய இதழ்களை இயங்க விடாமல் தடுத்துளார் .

காரைக்கால் (18-07-16): மத்திய அரசின் திட்டங்களை காலத்தோடு செயல்படுத்தவேண்டும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...