பரப்படும் வதந்திகள்: வாட்ஸ் அப் அட்மின் என்ன செய்யலாம்?

April 29, 2017

விஞ்ஞான முன்னேற்றத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டம்தான் வாட்ஸ் அப்.

குறுஞ்செய்தியின் அடுத்தகட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி பல்கிப் பெருகி கிட்டத்தட்ட அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருந்தால் இந்த வாட்ஸ் அப் உண்டு. இல்லையேல் இதற்காகவே ஸ்மார்ட் போன் வாங்கியாக வேண்டிய நிர்பந்தம்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பினால் பலர் பெரிதும் பாதிக்கப்படுவதை நாம் அறிகிறோம். குறிப்பாக வதந்திகள் (FAK NEWS) பரப்படுவதில் வாட்ஸ் அப் முதன்மை பங்கை வகிக்கிறது.

அதிலும் முக்கியமாக பலர் பல குழுக்களை தொடங்கி அதில் செய்திகளை பகிர்ந்து வரும் அதேவேளையில் அதில் ஊடுறுவும் சில விஷமிகள் பொய் செய்திகளை பரப்பி விடுகின்றனர். அதனை அறியாத அப்பாவிகளும் அதற்கு பலிகடா ஆக்கப்பட்டு விடுகின்றனர்.

இன்னும் சிலர் மத உணர்வுகளை புண்படுத்துதல். தனிநபர் விரோதங்களுக்கு வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்துதல் என பல வகைகளில் இதன் பாதிப்பு அதிகம். மேலும் புகைப்படங்களை போட்டோ ஷாப் மூலம் செட்டப் செய்து பதிந்து அறியா மக்களை நம்ப வைக்கும் யுக்தியும் இப்போது ஃபேஸ்புக்கை விட வாட்ஸ் அப்பில் அதிகரித்து விட்டன.

இந்நிலையில்தான் தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது வாட்ஸ் அப் குரூப்களில் தவறான தகவல்கள் யார் பரப்பினாலும் அந்த குரூப் அட்மின் சைபர் க்ரைம் குற்ற வழக்கில் கைது செய்யப்படுவார். என்றும் இதனை தவிற்க வேண்டுமெனில் தவறான தகவலை பரப்பியவர் குறித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் மேலும் அவரை குரூப்பை விட்டு விலக்க வேண்டும். இல்லையேல் அவரது தவறான தகவலுக்கு அட்மினும் துணை போவதாக அர்த்தம் என்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் மத உணர்வுகள், மொழி, இனம், பாலினம் உள்ளிட்ட தாக்குதல் குறித்த எந்த பதிவுகளுக்கும் வாட்ஸ் அப்பில் இடமில்லை என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. இதே போன்ற உத்தரவுகள் பிற மாநிலங்களிலும் பின்பற்றப் படவேண்டும் என்ற கோரிக்கையும் பொதுநல ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

வாட்ஸ் அப் அட்மின் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய விசயங்கள்:

குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நம்பகமானவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழுவில் உள்ளவர்களுக்கு குழு விதிமுறைகளை தெரிவிக்க வேண்டும்
உறுப்பினர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் பதிந்தால் அவர்களை நீக்க வேண்டும்
அவசியப்பட்டால் காவல்துறையிடம் குழப்பவாதிகள் மீது புகார் அளிக்க வேண்டும். இல்லையேல் அட்மின் மீது குற்றம் பாயும்.
குழு உறுப்பினர்களின் அனைத்து பதிவுகளையும் கண்காணிக்க வேண்டும்.

What should a WhatsApp admin do to avoid jail for member’s mistake

Ensure that all the members in the group are reliable.
Inform police if members resort to mischief
Members of the group should be informed about the rules to be followed while posting in the group.
Prevent member from posting any objectionable content
Monitor the content shared by the members in the group

 

தற்போது வாசிக்கப்படுபவை!