மாட்டுக்கறியுடன் இப்பொழுது மாம்பழமும் மனிதாபிமானமும் மிருகத்தனமும்!

ஜூலை 06, 2017 777

பீகார் மாநிலத்தில் நேபாள் எல்லையில் அமைந்துள்ள அராரியா மாவட்டம், கேண்டிக்ரி கிரமாத்தில் உள்ள இப்ராஹிம் ஷஃபி, தன் 8 வயது மகள் அமெருடன் ஈத் பெருநாளைக்கும் பொருட்கள் வாங்க கடைத்தெரு சென்று திரும்பும்போது, அமெர் தன் தந்தையை வீட்டிற்க்கு செல்லுமாறும், தான் சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி சென்றார்.

மகள் அவளுடைய தோழிகளுடன் விளையாடிவிட்டு வருவார் என்று நினைத்த இப்ராஹிம், சரி என்று சொல்லிவிட்டு வீடு சென்று விடுகின்றார். ஆனால் மாலையாகியும் வீடு திரும்பாத மகளை எண்ணி கவலைப்பட்டு தேடத்துவங்கினர். அப்பொழுது ஊரார் சொன்ன தகவலின் படி அருகே இருந்த குளக்கரையில் சென்று பார்த்தபொழுது அமெருன் கத்தியால் குத்தப்பட்டும், மின்சாரம் பாய்ச்சியும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார்.

விசாரித்தபோது அமெருன் அங்கேயிருந்த சஞ்சய் மேத்தா என்பவரின் தோட்டத்தில் மாங்காய் பறித்ததாகவும், அதை கண்டித்தே சஞ்சய் மேத்தாவும், அவனுடன் இருந்தவர்களும், அமெருனை இப்படி சித்திரவதை செய்து கொன்றிருக்கின்றார்கள் என்றும், அவரது தோட்டத்தில் அமெருனுடைய ரத்த காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இப்ராஹின் அங்கேயிருந்து காவல் நிலையத்தில் அவர்கள்மீது புகார் அளித்தார். அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய எத்தனிக்குமுன் சஞ்சய் மேத்தாவுன் அவனுடன் உடனிருந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர். காவல் துறையினர் அவர்கள் எல்லை தாண்டி நேபாளத்திற்கு சென்றிருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.

நம் இந்தியாவிற்குள் நேபாள் வழியாக பாகிஸ்தான், பங்களதேஷ், நாடுகளை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுறுவுகின்றார்கள் என்ற காரணத்தால் இந்திய அரசு நேபாளத்திற்க்கு அதிக பொருளாதார உதவி செய்து நட்பு பாராட்டி இந்தியாவின் நேச நாடாக வைத்துள்ளது அந்த நேசத்தை கொண்டு தப்பிய கொலைகாரர்களை விரைந்து இந்தியா கொண்டுவர ஆவண செய்யவேண்டும்.

என்ன கொடுமை என்றால் இந்தியாவில் இதுவரை மாட்டுக்கறி பெயரை சொல்லி கொல்லப்பட்டுவந்த சிறுபான்மையினர் உயிர்கள் இப்பொழுது மாம்பழத்திற்க்காக கொல்லப்பட்டுள்ளது. இதையும், மாம்பழம் என்றால் என்ன சாதாரணமா?? எங்கள் கணபதிபாப்பா போட்டியில் வென்ற புண்ணிய கனி என்றும், ஒரு பழத்தால் சிவனுடையை குடும்பமே உடைந்திருக்கின்றது என்றும், பழம் என்றால் சாதாரணமானதா என்று வாழைப்பழ காமெடியில் கவுண்டமனி சொல்வதுபோல சொல்ல தொடங்கி விடப் போகின்றார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.

இதே நேரத்தில் இங்கே ஒன்றை நினைவு படுத்தவேண்டும், பல வருடங்களுக்குமுன், இதே பீகாரை சேர்ந்த காதுகேளாத, வாய்பேச முடியாத 7 வயது கீதா என்ற பெண் குழந்தை ரயில் பிரயாணத்தின்போது தவறி பாகிஸ்தானுக்கு சென்றுவிடுகின்றது.

அந்த குழந்தையை வழிதவறி வந்த பிள்ளை தீவிரவாதி என்று கொன்றுவிடாமல், அங்கே உள்ள எதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் எடுத்து பல்கீஸ் என்பவர்மூலம் வளர்த்து வந்தது, பின் இப்பொழுதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விஷயத்தை அறிந்து அந்த குழந்தையை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் இந்திய அரசுதானே கேட்கின்றது என்று தொல்லை ஒழிந்தால் போதும் என்று உடனே ஒப்படைத்து விடவில்லை, அதே சமயம் இத்தனை வருடம் எங்கள் நாட்டில் வளர்ந்துவிட்டது நாங்கள் தரமாட்டோம் என்று பிடிவாதமும் பிடிக்கவில்லை.

சம்மந்தபட்டவர்களிடம் மரபணு சோதனை நடத்தி, அவர்கள் உண்மையான பெற்றொர்கள் என்று அறிந்தபின் பொறுப்புணர்வுடன் அவர்களே இந்தியா அழைத்துவந்து, அரசிடமும், இப்பொழுது 25 வயதாகி விட்ட கீதாவின் பெற்றோரிடமும் ஒப்படைத்து மகிழ்வுடன் சென்றனர்.

நாம் இங்கே கூறவருவது என்னவென்றால், இஸ்லாமியர்கள் என்றால் ஏதோ தீவிரவாதிகள் என்றும், இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்றும், அதனால் உலகில் அமைதி கேள்விக்குறியாகி விட்டது என்றும், அதிலும் பாகிஸ்தானியர்கள் என்றால் தீவிரவாதிகளின் தலைவர்கள் என்பதுபோலவும், இந்தியாவிற்கு அவர்கள்தான் முதல் எதிரிகள் போலவும், அங்கே மத சகிப்பு தன்மை இல்லவே இல்லை என்றும் கூறிகூறி, இஸ்லாம் மீதும், இஸ்லாமியர்கள் மீதும், பாகிஸ்தான் மீதும் வெறுப்பை தூண்டி அரசியல் ஆதாயம் தேடிவருகின்றனர். இந்த விஷயத்தில் வெறுப்பு அரசியல் நடத்துபவர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்கள் நம் டி.ஆர்.பி வெறி பிடித்த ஊடகங்கள்.

இஸ்லாம் அல்லாதவர்கள் மீது பாகிஸ்தானியர்கள் கருணை காட்டுவார்கள் என்றும், இஸ்லாமியர்கள் மீது இந்திய ஹிந்துக்களில் சிலர் துவேஷம் காட்டுவார்கள் என்று புரியவைக்கின்றது. இதுபோன்ற நல்லவர்களும், கயவர்களும் இருபக்கமும் இருப்பார்கள். அவர்களை கண்டறிந்து நாம் களையெடுக்கவேண்டுமே தவிர எந்த ஒரு சமூகத்தின்மீதும் ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டிவிடக்கூடாது.

மேலதிகமாக சொல்லவேண்டும் என்றால், பாகிஸ்தான் சென்ற முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் சுவாமியும், முஸ்லிம் நாடு என்பதனாலையே அங்கு பல சமய மக்கள் வாழ முடியாமல் அவர்கள் உரிமைகள் பறிக்க படவில்லை. அங்கு அனைத்து சமயத்தினரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

அதேபோல் அங்கே உள்ள கிருஷ்ணர் கோயிலை புதுபிக்க அரசே நிதி ஒதுக்கின்றது. ஆனால் இங்கே, அரசு பாதுகாப்புடன் பள்ளிவாசல் இடிக்கப்படுகின்றது.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இப்பொழுது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நேபாளுக்கு தப்பி ஒடிய கொலைகாரர்களை விரைந்து இந்தியா கொண்டு வந்து கடுமையான தண்டனையான மரணதண்டனை அளிக்க ஆவண செய்யுமாறும், இனி இதுபோன்று மாட்டிற்காகவும், மாம்பாழத்திற்காகவும், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படமுடியாத, கூடாத சூழ்நிலையை நாட்டில் உருவாக்கவேண்டுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை இந்த மத்திய அரசு அனைவருக்கான அரசாக இருந்ததில்லை, இனியேனும் அப்படி இருக்குமா?

- யூசுப் ரியாஸ்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...