சலீம்கள் அதிகமாகத் தேவைப்படும் காலம் இது!

July 13, 2017

பா.ஜ.கவை எதிர்த்து அரசியல் செய்ய திராணியற்ற கட்சியாக காங்கிரஸ் ஆகிவிட்டதை தற்போதைய பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

மாட்டு அரசியல், பணமதிப்பிழப்பு இப்போது ஜி.எஸ்.டி என எதிலும் காங்கிரசின் எதிர்ப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நாடளுமன்ற பெரும் தோல்விக்குப் பிறகு நடந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் பெரிதாக காங்கிரஸ் சாதித்துவிடவில்லை.

அதேவேளை மாட்டு அரசியல், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்கள் மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. இதனை காங்கிரஸ் சரிவர பயன்படுத்திக்கொள்ள தயங்குவது ஏனோ.

இந்நிலையில் மேலும் ஒரு தவறை காங்கிரஸ் செய்ய தயாராகியுள்ளது. அதாவது மிதவாத இந்துத்துவா. இதனை தற்போது கையிலெடுத்துள்ளது காங்கிரஸ். வரும் குஜராத் தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும் என தெரிகிறது. பட்டேல் இன ஓட்டுக்கள் பாஜகவுக்கு விழாது என்ற கருத்து நிலவுவதால். முஸ்லிம்களின் வாக்குகளை பாஜக குறிவைத்து காய் நகர்த்துகிறது.

இந்நிலையில்தான் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலில் அந்த பேருந்தை ஓட்டிய முஸ்லிம் ஓட்டுநர் சலீம் சாமர்த்தியமாகவும் அதிவேகமாகவும் பேருந்தை ஓட்டியதால்தான் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது.

இதில் ஹீரோவாக ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த சலீம் பலராலும் தொடர்ந்து பாராட்டப் பட்டு வருகிறார். வன்முறைக்கு வழிகாட்டியான குஜராத்தில் 2002 கலவரத்தில் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிய மத வெறியர்கள் கூட இப்போது சலீமை கொண்டாடுகின்றனர்.

வன்முறை அரசியலின் மூலமும், மதவாத அரசிலின் மூலமும் வளர்ந்த பாஜகவையும், முதுகில் குத்தும் காங்கிரஸையும் சமாளிக்க இந்தியாவில் தற்போது சலீம்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!