லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?- முழு விவரம்!

லண்டன் வெம்பளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இந்தி ரசிகர்கள் சிலர் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து லண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர் ஒருவர் முழு விவரம் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வது ஆண்டு இசை பயணத்தை கொண்டாடும் விதமாக லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ரஹ்மானின் முதல் தமிழ்படமான ரோஜா தொடங்கி தற்போது வரை உள்ள முக்கியமான பாடல்கள் தமிழிலிலும், இந்தியிலும் இசைக்கப்பட்டது.

ஆனால் இந்தி பாடல்கள் பாடவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை வைத்த சிலர் வேண்டுமென்றே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி டிவிட்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தவறாக சித்தரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

உண்மையில் நிகழ்ச்சியிலிருந்து சிலர் வெளியேறியது அங்கிருந்த ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. மேலும் எந்த சலசலப்பும் நிகழ்ச்சியில் ஏற்படவில்லை. ஏனென்றால் ரஹ்மான் அப்படி எந்த தவறையும் செய்யவில்லை. குறிப்பாக 16 இந்தி பாடல்களும் 12 தமிழ் பாடலகளும் பாடப் பட்டன. குறைவான தமிழ் பாடல்கள் பாடப்பட்டதால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்குதான் அதிருப்தி. ஆனால் ஒரு சிலரின் ட்விட்டர் போஸ்ட்டை வைத்து இந்தியாவின் சில முன்னணி ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்விவகாரத்தை ஊதி பெரிதாக்கியுள்ளன. என்று தெரிவித்தார்.

மேலும் தமிழில் அறிமுகமாகி தமிழ் மூலம் இந்திக்கு சென்ற ரஹ்மான் எப்படி இந்தி பாட்டை மட்டும் பாட முடியும்? லண்டனில் சுமார் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அப்படியிருக்க அவர் தமிழ் பாடல்கள் மட்டுமே பாடியிருக்க வேண்டும். மாறாக அனைவரையும் திருப்திப் படுத்தும் விதமாக இந்தி பாடல்களும் அந்நிகழ்ச்சியில் பாடி நேர்மையை கடைபிடித்துள்ளார்.

அப்படியிருக்க அவரை பாராட்ட வேண்டுமே தவிர அவரை அவமானப் படுத்தும் விதமாக கருத்திடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. .

ஒன்றுமில்லாத விசயத்தை சில இந்தி ஊடகங்கள் இவ்விவகாரத்தை வேண்டுமென்றே ஊதி பெரிதாக்கிவிட்டன. நிகழ்ச்சியில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்பதே உண்மை என்று அவர் தெரிவித்தார்.

Last modified on Wednesday, 19 July 2017 14:30